'நிஜ வாழ்க்கையில் சாண்டா’ - தினமும் நாய்க்குட்டியை தன்னுடன் அழைத்துச்செல்லும் ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்..

'நிஜ வாழ்க்கையில் சாண்டா’ - தினமும் நாய்க்குட்டியை தன்னுடன் அழைத்துச்செல்லும் ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்..

ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது , தன்னுடைய செல்லப்பிராணியையும் கூடவே அழைத்து சென்றது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது , தன்னுடைய செல்லப்பிராணியையும் கூடவே அழைத்து சென்றது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

  • Share this:
கோவிட் -19 தொற்றுநோய் செல்லப்பிராணிகளுக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் செல்லப்பிராணிகளும் வைரஸ் தொற்றுநோயை பெறக்கூடும் என்று மக்கள் அஞ்சினர். அப்போது உலகின் ஒருசில இடங்களில் மட்டும் நாய்கள் மற்றும் பூனைகள் கோவிட்டால் பாதிக்கப்பட்டன. ஆனால் அந்த பாதிப்புகள் அரிதானவை. ஆனாலும், தொற்றுநோயின் மிக முக்கியமான காலங்களில் மக்கள் செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துவராமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். 

இருப்பினும், ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது கூட, தன்னுடைய செல்லப்பிராணியை அவருடன் எப்போதும் வைத்திருந்தார். அவரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளை பெற்றதுடன் நாய்கள் மீது இன்னும் ஒருசில மனிதர்கள் கருணையுடனும் அவற்றின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு உதவியும் வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு முக்கிய சான்று. ஓட்டுநரின் இந்த கதையை தனது சகோதரியுடன் ரிக்‌ஷாவில் சென்ற மஞ்சரி பிரபு என்ற பெண்மணி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தார். 

அந்தப் பெண் இந்த மனிதம் மிக்க நபரை நிஜ வாழ்க்கையின் சாண்டா  என்று புகழாரம் சூட்டியுள்ளார். "இன்று நான் நிஜ வாழ்க்கையில் ஒரு  சாண்டாவை சந்தித்தேன்" ரிக்‌ஷா ஓட்டும் அவரின் பெயர் ஹர்விந்தர் சிங் என்பதாகும் என்று மஞ்சிரி பிரபு ஒரு பேஸ்புக் போஸ்டில் பகிர்ந்து கொண்டார். மஞ்சிரியும் அவரது சகோதரி லீனாவும் வேறொரு இடத்திற்கு செல்வதற்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறிசென்றுகொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கியபின் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரின் காலுக்கு அருகில் ஒரு நாய்க்குட்டி அந்த குறுகிய இடத்தில் அடக்கமாக படுத்துக் கொண்டிருந்தது. 

அந்த நாய்க்குட்டி பார்ப்பதற்கு "அழகான பழுப்பு நிற கண்களுடனும்" டிரைவர் சீட்டுக்கு கீழ் சுருண்டு  படுத்துக்கொண்டு கண்ணில் அன்புடன் தங்களை பார்த்ததாக மஞ்சரி பிரபு கூறினார். "எனக்கு ஆச்சரியமாக இருந்தது ... அந்த நாய்க்குட்டி எங்களை பார்த்து கத்தவில்லை. பொதுவாக நாய்கள் அன்னியர்களை கண்டால் குரைக்கும், ஆனால் இந்த நாய்க்குட்டி ஆட்டோவில் இருந்ததற்கான அடையாளமே எங்களுக்கு இறங்கும் வரை தெரியவில்லை என்று கூறினார். முதலில் அந்த நாய்க்குட்டியை ஹர்விந்தர் சிங்கின் மகன் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், நீண்ட நாட்கள் தங்களுடனே அந்த நாய் இருந்ததாகவும் இப்போது அந்த நாயை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், நாய்க்குட்டியை தான் சவாரிக்கு உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்ததாக சிங் கூறினார்." 

மேலும் நாய்க்குட்டியை தெருவோரங்களில் அப்படியே விட்டுவிடுவதற்கு மனமில்லாததால் ஆட்டோ டிரைவர் நாய்க்குட்டியை தன்னுடனே வைத்திருக்கிறார், என்று சமூக வெளியில் மஞ்சரி போஸ்ட் செய்துள்ளார். ஹர்விந்தர், அந்த நாய்க்குட்டிக்கு ரோனி என்று பெயரிட்டுள்ளதாகவும், மேலும் அவர்கள் இருவருக்கும் தேவையான  உணவு மற்றும் தண்ணீரை ஆட்டோ ரிக்‌ஷாவில் வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். "உலகில் எப்போதுமே சில நல்ல ஆத்மாக்கள் வெவ்வேறு உயிர்களுக்காக வெவ்வேறு வழிகளில் உண்மையான சாண்ட்டாக்களாக இருந்திருக்கிறார்கள், அத்தகையவர்களின் மனிதநேயம் எந்த ஒரு விளம்பரங்கள் இன்றியும் யாருக்கும் தெரியாமலும் இருந்து வந்தன. 

பேஸ்புக்கில் இந்த போட்டோ போஸ்ட்டின் மூலம் இது போன்ற மனிதர்கள் நம்மிடையே இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கையை மக்களிடையே விதைக்கத்தான் சமூக வெளிக்கு இந்த சம்பவத்தை தான் கொண்டுவந்ததாக மஞ்சரி பிரபு கூறியுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: