ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேச்சாற்றலால் மயக்கிய அறிஞர் அண்ணா

மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேச்சாற்றலால் மயக்கிய அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா

நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டிய போது, குறுக்கிட்ட நேரு “அவரை தொந்தரவு செய்யாதீர்கள், பேசவிடுங்கள்” என்று கூறி அண்ணாவின் பேச்சை கேட்டு ரசித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

1963ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் ‘சென்னை மாகாணம்’ என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டுவந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.என். லிங்கம், “தமிழ்நாடு எனப் பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது பேசிய அண்ணா, “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று கேட்டார் அதற்கு காங்கிரஸ் உறுப்பினரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய பேச்சாற்றல் மிக்கராக அண்ணா திகழ்ந்தார்.

இந்தி எதிர்ப்பு நிலைபாடு, திராவிட நாடு கோரிக்கை போன்றவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்நிலையில், அவர், சென்னை வந்தபோது திமுகவினர் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக திமுக தலைவர்களை ‘நான்சென்ஸ்’ என்று கூறி கடுமையாக விமர்சித்தார். பின்னர், மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு வியந்து போனார்.

நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டிய போது, குறுக்கிட்ட நேரு “அவரை தொந்தரவு செய்யாதீர்கள், பேசவிடுங்கள்” என்று கூறி அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டு, மனம் மயங்கினார் நேரு. அண்ணா வலுவான வாதங்களை வைத்துப் பேசுவதில் அலாதி திறமை மிக்கராக இருந்ததுடன், மாற்று கருத்து கொண்டவர்களையும் மனம் மயங்க வைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தோல்வியுற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா, “காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என்று மிகுந்த அரசியல் நாகரிகத்தோடு கூறினார். மேலும், “வெற்றியைக் கொண்டாடுகிறேன் என்று கூறி தோல்வியுற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது.

Must Read : அன்றே சொன்னார் அண்ணா: லடாக் எல்லை விவகாரம் நீண்டகால போருக்கு வழிவகுக்கும்...

எனவே, கொஞ்சநாள் கொண்டாட்டங்களைத் தள்ளிப்போடுங்கள் என்று கண்ணியத்தோடு கூறியவர் அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை.

இன்று அறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anna birthday, Anna Speech