”அனிருத், தனுஷின் புரொஃபைல் பிக்சர் என்னுடைய ஓவியம்தான்”- ஓவியர் வினோத்

படங்களின் போஸ்டர், பிரபலங்களே வெளியிட்ட புகைப்படங்களை மீண்டும் அச்சு அசலாக அப்படியே வரைவார். 

Sivaranjani E | news18
Updated: February 5, 2019, 5:15 PM IST
”அனிருத், தனுஷின் புரொஃபைல் பிக்சர் என்னுடைய ஓவியம்தான்”- ஓவியர் வினோத்
ஓவியர் வினோத்
Sivaranjani E | news18
Updated: February 5, 2019, 5:15 PM IST
ட்விட்டரில் இவர் போடும் ட்வீட்டுகளுக்கு பிரபலங்களின் பாராட்டுகள் குவிகின்றன. அவரும் நன்றிகள் கூறி ஓய்ந்தபாடில்லை. ஒருகட்டத்தில் ரஜினியே பார்க்க ஆசைப்பட்டு நேரில் அழைத்து பாராட்டுகிறார். யார் அந்த மனிதர்?

மலேசியாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் வினோத்தான் அந்த பாராட்டுகளுக்குச் சொந்தக்காரர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராயினும் இவரது குடும்பம் சுதந்திரப் போராட்டத்தின் போதே மலேஷியாவில் குடியுரிமைப் பெற்றவர்கள்.

சிறு வயது முதலே கற்பனைத் திறனில் ஆர்வம் கொண்ட வினோத் எப்போதும் வித்யாசமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தன் கற்பனைத் திறன்களை ஓவியமாக வரைந்துள்ளார்.இவர் தான் வரையும் பிரபலங்களின் ஓவியங்களை ட்விட்டரில் போடுவது வழக்கம். அப்போது அந்தப் புகைப்படத்திற்குரிய பிரலம் அதைப் பார்த்தாலோ, அல்லது மற்ற பிரபலங்களுக்கு அந்த ஓவியம் பிடித்திருந்தாலோ உடனே கமெண்டில் பாராட்டுகின்றனர். அப்படி அனிருத், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

இவர் எந்தவிதப் பயிற்சி வகுப்புகளுக்கும் போகாமல் தாமாகவே ஓவியம் வரையக் கற்றுக் கொண்டுள்ளார். ”நான் 7 வயது முதலே ஓவியங்கள் வரைகிறேன். அப்போதெல்லாம் சினிமா நடிகர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில்தான் காண முடியும். அப்படி பத்திரிகைகளைப் பார்த்து வரையத் தொடங்கியதுதான் இன்று வரைத் தொடர்கிறது” எனக் கூறும் வினோத் பென்சிலில் வரையக் கூடிய ரியலிஸ்டிக் ஓவியம், கலர் பென்சிலில் வரையக் கூடிய கலர் ஓவியம், இன்வெர்ட் ஆர்ட், ஸ்க்ரிப்பில், டூடுல் என ஆறு வகையான ஓவியங்களில் வல்லவராக இருக்கிறார். மலேஷியாவில் ’விக்டரி க்ரியேட்டிவ் ஸ்டுடியோ’ என்கிற பெயரில் ஆர்ட் ஸ்டூடியோ வைத்திருக்கிறார். அதில் சிறியவர்கள் பெரியவர்கள் என 20க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார்.இவரின் விருப்பம் நடிகர்களின் புகைப்படங்களை மறு உருவமாக வரைவதுதான்.  படங்களின் போஸ்டர், பிரபலங்களே வெளியிட்ட புகைப்படங்களை மீண்டும் அச்சு அசலாக அப்படியே வரைவார்.  “என் ஓவியங்களை காணும் நடிகர்கள் நான் அச்சு அசலாக வரைந்திருக்கிறேனா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். என்னுடைய உழைப்பைப் பார்த்து உடனே வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிலர் கமெண்டிலேயே நிறை குறைகளைச் சொல்வார்கள். அதை வைத்து என்னை திருத்திக்கொள்வேன். இப்படித்தான் நான் ஓவியம் வரைவதைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறும்  வினோத்திற்கு பென்சிலில் தத்ரூப ஓவியங்கள் வரைவதைதான் விரும்புகிறார்.  அவரின் முன்னோடி பிரபல தத்ரூப ஓவியக் கலைஞன் சார்லஸ் லாவ்சோ தான்.எத்தனை நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வரைந்தாலும் ரஜினியின் புகைப்படத்தை வரையும்போது மட்டும் ஒருவித குஷி ஏற்படும் என்கிறார். இதுவரை அவரின் ஓவியங்களை மட்டுமே நூற்றுக்கும் மேல் வரைந்திருக்கிறார் வினோத்.”நான் தலைவர் ரசிகன். அவரின் எந்தப் புகைப்படம் வெளிவந்தாலும் முதல் வேலையாக அந்தப் புகைப்படத்தை ஓவியமாக்குவதுதான் என் வேலை. அதுவும் 100 சதவீத திருப்தி அடையும் வரை அந்த ஓவியத்தை  மீண்டும் மீண்டும் வரைந்து கொண்டே இருப்பேன். சமீபத்தில் வெளியான பேட்ட படத்தின் போஸ்டரை ஓவியமாக வரைந்து ட்விட்டரில் அப்லோட் செய்திருந்தேன். ரஜினி அதைப் பார்த்துவிட்டு மலேஷிய பி.ஆர்.ஓவை அழைத்து என்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். உடனே அவர் என்னைக் கண்டறிந்து என்னைக் கூப்பிட்டார். உண்மையிலேயே அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாது. அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்’’ என புன்னகை ததும்ப பேசுகிறார் வினோத்.தமிழ் சினிமாப் பிரபலங்கள் மலேஷியா வந்தாலும் ஓய்வு நேரத்தில் வினோத்தை சந்திக்க அழைப்பார்களாம். அவர்களைப் பார்த்து பேசிவிட்டு அவர்களின் ஓவியங்களை பரிசாக வழங்குவாராம்.” சமீபத்தில் சிவகார்த்திகேயனைச் சந்தித்து ஓவியங்கள் வழங்கினேன். அவர் மிகவும் மகிழ்ந்து பாராட்டினார்”என்கிறார் வினோத்.

”அதேபோல் விஜய் சேதுபதியின் பிறந்தநாளிற்கு அவரின் ஓவியத்தை வரைந்து அனுப்பினேன். அதற்கு அவர் என்னைப் பாராட்டி , அவர் கைப்பட கடிதம் எழுதி அனுப்பினார். அது உண்மையிலேயே மறக்க முடியாத தருணம்.

ஒரு முறை அனிருத் மற்றும் தனுஷ் நான் வரைந்த அவர்களின் ஓவியத்தை ட்விட்டரில் புரொஃபைல் பிக்சராக வைத்திருந்தனர். அது எனக்கு மிகப் பெரும் அங்கீகாரமாக இருந்தது” என்கிறார்.

இந்த பாராட்டுகள் மட்டும் உங்களுக்குப் போதுமா என்ற கேள்வியை முன் வைத்தபோது “எனக்கு என்னுடைய ஆர்ட் ஸ்டுடியோவை விரிவாக்க வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சிகள் அளிக்க வேண்டும். இதுபோல் மேலும் பல ஓவியங்களை வரைந்து கொண்டே இருக்க வேண்டும் என பல கனவுகள் இருக்கின்றன. இது என்னுடைய பேஷன். அது என்னுடைய ஃபுரொபஷன் என தன் பாதையை தெளிவுபடுத்துகிறார் வினோத்.

இதுவரை எந்தவித கேலரிகளிலும் தனது ஓவியங்களை வைத்ததில்லை. விருதுகள் வாங்கியதில்லை. இருப்பினும் அவர் எதிர்பார்ப்பவர்களிடமிருந்தே நேரடியாக பாராட்டுகளும் அங்கீகாரமும் குவிகின்றன.
First published: February 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...