இந்தியப் போக்குவரத்தின் எதிர்காலம்- மின்சார வாகனங்களின் தேவைகள் என்ன?

மாதிரிப் படம்

மின்சார வாகனங்களின் பயன்பாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கையும் ஏற்படுத்தும்.

  • Share this:
    இந்தியர்களின் வீடுகளில் பல தசாப்தங்களாக சீடக், ஸ்பெக்ட்ரா, புல்லட், யேடி, ராஜூட் போன்ற வார்த்தைகள் ஒரு பகுதியாக இருந்துவந்தன. மலைப் பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பசுமை நிறைந்த கேரளா வரை இரு சக்கர வாகனம் என்பது தவிர்க்க முடியாத முக்கிய கலாச்சார அடையாளமாக இருந்துவருகிறது. 80-களில், 90-களில் பயணிப்பதற்கு இரு சக்கர வாகனங்கள் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. 2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகு இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பது என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சுதந்திரத்துக்கான அடையாளமாக உருவானது.

    தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளதாக ஓலா நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்தியாவில் பொதுமக்கள் பயணிப்பதற்கு இரு சக்கர வாகனத்தின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் நடைபெறும் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இருசக்கர வாகன விற்பனையின் அளவு 80 சதவீதமாக இருந்துவருகிறது. அதேநேரத்தில், உலக அளவில் இந்தியா இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரிய நாடாக உள்ளது.

    வேகமாக மாறிவரும் உலகில் சுற்றுச்சூழலுக்கும், போக்குவரத்துக்கு மாற்றம் என்பது மிகவும் வெளிப்படையான ஒன்று. போக்குவரத்து துறையில் இருந்துவரும் உலகளாவிய இடையூறில் இந்தியாவில் பங்கு முக்கியமானது. போக்குவரத்து துறையிலுள்ள வளர்ச்சியைக் கனித்து ஐ.ஐ.டி டெல்லியில் மின்னணு வாகனங்கள் துறைக்கு இரண்டு ஆண்டு எம்.டெக் படிப்பைத் தொடங்கியுள்ளது. மின்னணு வாகனங்கள் பயன்பாட்டின் தொடக்க நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முக்கிய பங்கை வகிக்கும்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள பி.ஆர்.டி.எஸ் பேருந்து நிலையத்தில் தற்போது புகை உமிழ்வு இல்லாத பேருந்து சேவைகள் பயணிகளுக்கான பயன்பாட்டில் இருந்துவருகின்றன. சமீபத்தில் இந்த நகரத்துக்கு புதிதாக 50 புதிய எலக்ரானிக் பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. அகமதாபாத்திலிருந்து மூன்று மணி நேர பயண இடைவெளியில் உள்ள கேவடியா நகரம், இந்தியாவின் முதல் எலக்ரானிக் வாகனங்கள் மட்டும் உள்ள நகரமாக உருவாகிவருகிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் சைக்கிள் ரிக்ஸாக்கள், ஆட்டோக்கள், சிறிய மற்றும் பெரிய பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

    எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் உயர்ரக தரத்தில் 3 லட்சம் எலக்ரானிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதன் மூலம் 9 நகரங்களில் 40 லட்சம் பொதுமக்கள் மின்னணு வாகனத்தை பயன்படுத்தும் நிலையை அடைய முடியும் என்று அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவின் நகரமயமாதல் பாதைக்கு பொதுப் போக்குவரத்து என்பது முக்கிய வினையூக்கியாக இருக்கும். 2035-ம் ஆண்டுக்குள் உலக அளவில் மிக வேகமாக வளரும் 20 நகரங்களில் இந்தியாவின் 17 நகரங்கள் மிகவேகமாக வளரும் வகையில் இடம்பெற்றிருக்கும்.

    நமது சமகாலத்தில் பொதுச் சுகாதார அவரசநிலையை எதிர்கொண்டிருக்கும் சூழலில் இந்தியா நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் சிறந்த பொதுப் போக்குவரத்தை கட்டமைக்க இதுதான் சிறந்த நேரம். நகரங்கள் மற்றும் கிராமங்கள் எலக்ரானிக் இரு சக்கர வாகனங்கள், எலக்ரானிக் மூன்று சக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விலை குறைந்த எலக்ரானிக் வாகனங்கள் சார்ஜ் மையங்களின் பயனை அறுவடை செய்யப்போகிறார்கள். இந்திய தர மதிப்பீடு நிறுவனம் மிக அதிக அளவில் எலக்ரானிக் சார்ஜிங் மையத்தை அனுமதிக்கவுள்ளது. 3,500 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போன் மூலம் கையாளக் கூடிய சிறந்த மலிவான ஏசி(Alternating current) சார்ஜ் மையம் எலக்ரானிக் சார்ஜிங் உள்கட்டமைப்பில் உலக அளவில் திருப்புமுனையாகும்.

    இந்திய நகரங்களில் மூன்று சக்கர வாகனங்களின் பெருக்கதை நாம் காணமுடியும். அதன் மூலம், இறுதி தூரம் வரையில் எளிமையான முறையில் பணத்தை மேற்கொள்ள முடியும். அது பலருக்கும் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது. இந்தியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான எலக்ரிக் ரிக்ஸாக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில், தினமும் 6 கோடிக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். அதிக அளவில் எலக்ரானிக் மூன்று சக்கரவாகனங்களை வாக்குவதன் மூலம் குறைந்த விலையில் இந்தியாவின் கடைசி எல்லைவரை பயணிக்க முடியும்.

    2013-ம் ஆண்டு அக்டோர் மாதம் ஐ.ஐ.டி சென்னையில் படித்த இருவர் லித்தியம் ஐயன் பேட்டரி தயாரிக்கும் எண்ணத்தில் வந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்கள், இந்தியாவின் முதல் எலக்ரானிக் இரு சக்கர வாகனத்தை உருவாக்கினர். எட்டு வருடங்கள் கழித்து அவர்களுடைய அதெர் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 10 எலக்ரானிக் இரு சக்கரவாகனங்களை உற்பத்தி செய்கிறது. FAME II(Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India Phase II) வழிமுறைகளின் கீழ் ஒரு எலக்ரானிக் இரு சக்கர வாகனத்துக்கான மானியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்திவழங்கபடுகிறது.

    எலக்ரானிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் அது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பேட்டரி சேமிப்பு ஒரு முக்கிய துறையாகும். எலக்ரானிக் வாகனங்களில் பேட்டரியின் பங்கு என்பது மிக முக்கியமானது. எலக்ரானிக் வாகனங்களில் மொத்த விலையில் பேட்டரியின் விலை 40- 50 சதவீதமாகும். எலக்ரானிக் வாகனங்களின் பயன்பாட்டுக்கு இந்தியாவுக்கு சுமார் 1,200 ஜிகா வாட் பேட்டரிகள் தேவைப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த கொரோனா பெருந்தொற்று உலகத்தை பூஜ்ஜிய கழிவுகள் கொண்ட நிலையான வாழ்க்கை முறையை நோக்கி தள்ளுகிறது. FAME II திட்டத்தின் சமீபத்திய மறுவடிவமைப்பு இந்த இலக்கை அடைய வலுவான உத்வேகத்தை அளிக்கும். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் இந்தியா முழுவதும் தூய்மையான போக்குவரத்தின் எதிர்காலத்தைத் திறக்கும், இந்தியாவின் போக்குவரத்து அமைப்பை வளமாக்கும் மற்றும் இந்தியர்கள் செல்ல விரும்பும் வழியில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தும்.

    கட்டுரையாளர்: அமிதாப் கான்ட், நிதி ஆயோக் தலைவர்.
    Published by:Karthick S
    First published: