மனித ஆயுட்காலத்தில் மூன்று ஆண்டுகளைக் குறைக்கும் காற்று மாசு -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மனித ஆயுட்காலத்தில் மூன்று ஆண்டுகளைக் குறைக்கும் காற்று மாசு -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
காற்று மாசுபாடு (கோப்புப் படம்)
  • Share this:
-கபில் கஜால்
காற்றில் ஏற்பட்டுள்ள மாசுவினால் பல  உயிர்கொல்லி நோய்கள் மனிதனுக்கு வருகிறது. இதன் மூலம் மனித ஆயுட்காலம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேக்ஸ் பிளாங் என்ற வேதியியல் நிறுவனம் மற்றும் மேயின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் வன்முறை, புகைப்பழக்கம் மற்றும் இதர நோய்களை விட காற்று மாசுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.


2015 ஆம் ஆண்டு 8.8 மில்லியன் மக்கள் தங்களது ஆயுட்காலம் முடிவடைவதற்குள் இறந்துள்ளனர். அதற்கு காரணம் காற்று மாசு என்று அந்த அறிக்கை மேலும் தெரி்விக்கிறது. புகை பிடிப்பவரின் ஆயுட்காலம் அவர்களின் சராசரியிலிருந்து 2.2 ஆண்டுகள் குறைகிறது. ஆனால் மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்கள் ஆயுட்காலம் அதைவிட அதிகமாக அதாவது 2.9 ஆண்டுகள் குறைகிறது. எய்ட்ஸ் போன்ற நோயால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதேபோல் மலேரியா போன்ற நோய்களுக்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் பேர் இறக்கின்றனர்.

”உலக மக்களின் உடல்நலத்தை அதிகமாக பாதிப்பதால் காற்று மாசு ஒரு சர்வதேச பரவல்” என்று பல்கலைக்கழக ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி ஜாஸ் லெலிஎவ்லிட்  தெரிவிக்கிறார்.

ஆண்டு ஒன்றுக்கு உலக அளவில் 4.2 மில்லியன் மக்கள் தங்களுடைய ஆயுட்காலம் முடிவடைவதற்குள் இறந்துவிடுகின்றனர். மேலும் காற்று மாசுவினால் மக்கள் மருத்துவமனைகளை நாடும் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.கண்ணுக்கு தெரியாத கொலையாளி (the invisible killer) – காற்று மாசு கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் அது ஒரு உயிர்கொல்லி. 29% மக்கள் நுரையீரல் புற்று நோயால் உயிரிழக்கின்றனர் (lung cancer). 24% மக்கள் மூளை பக்கவாதத்தால் உயிரிழக்கின்றனர் (stroke).  25% மக்கள் இதய நோயால் உயிரிழக்கின்றனர் (heart diseases). 43% மக்கள் நுரையீரலில் நோய்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.(lung diseases)

இந்தியாவில் காற்று மாசுவின் தாக்கம்:

இந்திய மக்கள் தொகையில் 76.8% பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக “தி லேன்சட்” தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் 1.24 மில்லியன் மக்கள் மாசடைந்த காற்றை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர். அதில் 51.4% பேர் 70 வயதிற்கும் குறைவானவர்களே என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.

காற்று மாசு – ஒரு அமைதியான கொலையாளி:

காற்று மாசுவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தான் மனிதனுக்கு மிகப்பெரிய உடல்நலக்கேடு ஆகும். காற்று மாசுவை கட்டுப்படுத்துவதன் மூலம் மூளை பக்கவாதம், இதய கோளாறு, நுரையீரல் புற்று நோய் ஆகிய நோய்களிலிருந்து மக்களை காக்க முடியும்

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கைப்படி மனித உயிரிழப்புகளில் காற்று மாசு மற்றும் இதர மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

காற்று மாசுவால் ஏற்படும் சுவாச நோய்க்கு 49 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோயால் 33 சதவிகிதம் பேரும், நீரிழிவு மற்றும் இருதய நோய் காரணமாக 22 சதவிகிதம் பேரும், மூளை பக்கவாதத்தால் 15 சதவிகிதம் பேரும் மரணமடைவதாக இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

பெங்களூரூ- அதிக மாசு ஏற்படும் நகரம்:

உலக சுகாதார நிறுவனத்தின் படி காற்று மாசுவில் உள்ள துகள்கள், நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு ஆகியவைதான் மனிதர்களின் உடல்நலனுக்கு அதிக கேடு விளைவிக்கிறது. வாகனப் பெருக்கம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், விவசாயக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவைதான் மாநகரில் மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

காற்றுமாசு மாசுவினால்  தீவிர சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இதுமட்டுமின்றி பெங்களூரு மக்களுக்கு காற்று மாசுவால் புற்று நோய், இதய நோய், மூளை பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் குறைந்து வருவதாக  இந்திய அறிவியல் கழகத்தின் சூழலியல் மாறுபாட்டு துறை பேராசிரியர் டாக்டர் பரமேஸ் கூறுகிறார்.

மேலும், 1979 ஆம் ஆண்டுவாக்கில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா தொற்று வெறும் 9 -25.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ஆனால் அது 2009 ஆம் ஆண்டில் 20- 72.5 % ஆக அதிகரித்துள்ளது என பரமேஸ் தெரிவிக்கிறார். குழந்தைகளுக்கு காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த இணையதளத்தில் https://www.datawrapper.de/_/Rn8Q1/ தெரிந்துகொள்ளலாம்.

1970 ஆம் ஆண்டில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 47 வயதாக இருந்தது. மருத்துவ அறிவியல் முன்னேற்றத்தால் 2019 ஆண்டில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 69 ஆண்டாக அதிகரித்தது.

ஒரு மனிதன் காற்று மாசுவால் பாதிக்கப்படாமல் இருந்தால் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம். எந்த அறிவியல் முன்னேற்றங்கள் மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரித்ததோ அதே அறிவியல்தான் காற்று மாசுவையும் அதிகரித்து மனிதனின் உயிருக்கு கேடாக அமைந்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர் சந்தீப் அனிரூத்  கூறுகிறார்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த  சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இனிவரும் காலங்களில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் மேலும் குறையும் என்றும் சந்தீப் அனிரூத் தெரிவித்துள்ளார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading