ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

2024-ல் இந்தியாவை இயக்கப்போகும் மோடி- யோகி இரட்டை எஞ்சின்களுக்கு உத்வேகமூட்டும் உ.பி. தேர்தல் முடிவு

2024-ல் இந்தியாவை இயக்கப்போகும் மோடி- யோகி இரட்டை எஞ்சின்களுக்கு உத்வேகமூட்டும் உ.பி. தேர்தல் முடிவு

யோகி ஆத்யநாத்

யோகி ஆத்யநாத்

OPINION யோகி ஆதித்யநாத்தின் கதை, நம் வாழ்நாளில் காவி உடை அணிந்த பிரதமரைப் பார்க்க வாய்ப்புள்ள பகுதிக்கு முன்னேறியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

- அஜித் தத்தா 

வெறும் 5 அடி மற்றும் 4 அங்குல உயரம் கொண்ட யோகி ஆதித்யநாத், கோடிக்கணக்கான மக்களின் கனவுகளையும், உலகின் பழமையான நாகரிகத்தின் அபிலாஷைகளையும் தன் தோளில் சுமந்துள்ளார்.உத்தரப் பிரதேச தேர்தலில் மாபெரும் வெற்றியை பாஜக பெற்று, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலத்தை வழிநடத்தும் பொறுப்புக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தனது பாதை என்பது சூழ்நிலைகளின் பாதை அல்ல என்பதை 5 ஆண்டுகள் கழித்து யோகி ஆதித்யநாத் நிரூபித்துள்ளார்.

யோகி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம். உத்தரப் பிரதேசத்தின் முழுப் பதவிக் காலத்தை முடித்த எந்த ஒரு முதலமைச்சரும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை, இதன் மூலம்  மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பு எவ்வளவு கடினமானது மற்றும் மாநிலத்தின் வாக்காளர்களின் மனநிலை எத்தகையது என்பதனை அறிந்துகொள்ள முடியும். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி, யோகி மற்றும் தேசிய அரசியலுக்கு முக்கியமான மாற்றங்களைக் கொண்டுள்ளது.

யோகி ஆதித்யநாத், இந்திய நாகரிகத்தின் முதன்மையான பாதுகாவலர், சிறந்த நிர்வாகியாகி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட கருப்பொருள்கள். இந்த கருபொருட்களில் இடம்பெறாத ஒன்று யோகி ஆதித்யநாத் சிறந்த அரசியல்வாதி. , ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்மறையான விளம்பரப் பிரச்சாரங்களில் இருந்து வெளிவரும் பல நெருக்கடிகளை சாமர்த்தியமாக கையாண்ட முதலமைச்சர் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது SP-BSP மகாகத்பந்தனைப் எதிர்கொண்டு தனது  கட்சிக்கு 63 இடங்களை பெற்று தந்தவர் என்ற முறையில் தனது அரசியல் தகுதியை யோகி நிரூபிக்க வேண்டியதில்லை.

எனினும், 2017ம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் பெயர் பயன்படுத்தப்படவில்லை. அவரது தலைமையில் பாஜக போட்டியிடவில்லை. எனினு, தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு நியாயம் சேர்ப்பார் என பாஜக தலைமையால் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகி ஆதித்யநாத். இன்று கட்சியின் தேர்வு பலித்துள்ளது.  இந்த வெற்றியின் பின்னால் மோடி அலையும்  பாஜகவின் செயல்பாடும் உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை. அதேவேளையில், யாகி ஆதித்யநாத் மூலம் கிடைத்த வெற்றி என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது.

யோகியின் அரசியல் முக்கியத்தும் என்பது சரித்திரபூர்வமானது என்றாலும், இந்த தேர்தலின் சில சூழல்களை கணக்கில் எடுத்துகொள்ளாமல் அது முழுமை அடையாது.  காங்கிரஸ் கட்சியை பிரதமர் நரேந்திர மோடி பதவியில் இருந்து அகற்றிய பின்னர், இந்தியாவின் பிரதான அரசியல் கட்சி என்பதில் காங்கிரஸுக்கு மாற்றாக வளர்ச்சி பெற்றாலும், கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னான மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை அக்கட்சி சந்தித்தது.  கொரோனா முதலாவது அலையில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும்போதே இரண்டாவது அலை இந்தியாவில் தாக்கியது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சுவாசத்திற்காக போராடிக்கொண்டிருக்கையில், எதிர்க்கட்சிகள் மருத்துவமனைகளிலும், மயானங்களிலும் இறங்கி  வெற்றிகரமாக நாட்டின் மீது இருள் மற்றும் அழிவின் நிழலைப் போட்டனர். தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீண்ட போராட்டங்கள் மோடி ஆட்சியை மண்டியிடுவதற்கு மேலும் முயற்சித்தன. இதன் காரணமாக மேற்கு வங்க தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது.  பாஜகவின் மேல்நோக்கிய பயணம் இறுதி கட்டத்தை எட்டியது போன்று தோன்றியது. பாஜகவை சிதைக்க 2021ல் முடியாது என்றால் எப்போதும் முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், ஓராண்டுக்குள்ளயே உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. 2014 மற்றும் 2019 ஆகிய இரு ஆண்டுகளில் பாஜகவின் தேசிய வெற்றிகளின் இன்றியமையாத அம்சமான லக்னோ வழியாக டெல்லிக்கு செல்லும் சாலை பற்றிய அடல் பிஹாரி வாஜ்பாயின் புகழ்பெற்ற வாசகம் இன்று நினைவுகூரப்படும். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு வலுவிழந்து வரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லிக்கு பா.ஜ.க.வின் பாதை மீண்டும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே மிகப்பெரிய வெற்றியின் மூலம் பாஜகவின் தேசிய அரசியல் அதிர்ஷ்டத்தை மாற்றி அமைத்துள்ளதுதான் யோகியின் சிறப்பு.

2014 பொதுத் தேர்தல்கள், 2017 மாநிலத் தேர்தல்கள், 2019 பொதுத் தேர்தல்கள் மற்றும் இப்போது 2022 மாநிலத் தேர்தல்கள், பாஜக மோடி காலத்தில் குஜராத்தில் உருவாக்கிய ஆய்வகத்தை உத்தரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது - இது முழுமையான வளர்ச்சியின் முன்மாதிரி. அரசியல் பலனை இடைவிடாமல் அறுவடை செய்யும் கருத்தியல் ஆதிக்கம்.

குஜராத்தில், பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை பாஜக திட்டமிட்டு அழித்தொழித்து, ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலத்தை மேலும் மேம்படுத்துவதில் பணியாற்ற வேண்டியிருந்தது. இருப்பினும், உத்தரபிரதேசத்தில் இந்த அளவிலான ஆதிக்கத்தை அடைவது, அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில், மிக பெரிய பணியாக இருந்தது. மாநிலம் லோக்சபாவில் எண்பது இடங்களை பங்களிக்கும் நிலையில், 2026ல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் அதன் இடங்களின் விகிதம் உயரும் என்பதால், தேசிய அரசியலில் பிஜேபிக்கு யோகி ஆதித்யநாத்தின் முக்கியத்துவமும் தேவையும் அதிகரிக்கும்.

2014 ஆம் ஆண்டு தேசிய அரங்கில் நரேந்திர மோடியின் வருகையுடன், கோரக்பூரில் இருந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான யோகி ஆதித்யநாத்துக்கு   அவரது அமைச்சர்கள் குழுவில் இடம் கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். இடம் கிடைக்காதது பலரும் கவலை அடைய செய்தது. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய நரேந்திர மோடி, யோகியை இந்திய வரலாற்றில் மிகவும் ஆர்வமுள்ள அரசியல்வாதியாக மாற்றினார். யோகியை தேசிய அரசியலுக்கு கொண்டுவரும் பாத்திரத்தில் இருந்து உண்மையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இன்று, காவி உடை அணிந்த பிரதமரை நம் வாழ்நாளில் காணக்கூடிய அளவிற்கு இந்தக் கதை முன்னேறியுள்ளது.

கட்டுரையாளர்: அஜித் தத்தா 

அஜித் தத்தா ஒரு எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவார். ‘ஹிமந்தா பிஸ்வா சர்மா: ஃபிரம் பாய் வொண்டர் டு சிஎம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் கட்டுரையாளரின் கருத்துக்கள். இணையதளத்தின் நிலைப்பாட்டை குறிப்பது அல்ல.

தமிழில் : முருகேஷ்

First published:

Tags: Election 2022, Uttar pradesh, Yogi adityanath