ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

நண்பனை ஜாமீனில் எடுக்க கைவரிசை - அடகு கடையில் திருட சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நண்பனை ஜாமீனில் எடுக்க கைவரிசை - அடகு கடையில் திருட சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கைதான திருடர்கள்

கைதான திருடர்கள்

Sivagangai Crime News : ரிலையன்ஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு எதிர்பார்த்த அளவு எதுவும் கிடைக்கவில்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  திருவையாறு நடுக்கடையை சேர்ந்தவர்கள் ஞானஅன்பு அரசு(21), கலையரசன்(33) இருவரும் வழக்கு ஒன்றில் திருச்சி சிறையில் இருந்து சமீபத்தில் பிணையில்  வெளிவந்துள்ளனர்.இவர்கள் இருவரும் சிறையில் இருக்கும் சக நண்பரான கார்த்தி(28) என்பவரை பிணை எடுக்க நினைத்தனர். ஆனால் கையில் பணம் இல்லாததால் திருட்டு  சம்பவத்தில் ஈடுபட்டால் பணம் கிடைக்கும், அதன் மூலம் சிறை நண்பனை பிணையில் எடுக்கலாம் என எண்ணினர்.

  அதன்படி காரைக்குடி பகுதியை சேர்ந்த சிறை பழக்க நண்பன் மூலம் காரைக்குடி வருகை தந்தனர். அப்போது, கழனிவாசல் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்தி(40). இவர் கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதை அறிந்து வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை திருடினர்.

  பின்னர் காரில் சென்று அசோக் நகர் பகுதியில் தங்க நகை அடகு கடை என நினைத்து பூட்டை உடைத்து லாக்கரில் நகை இருக்கும் என உள்ளே நுழைந்தான் திருடன் கலையரசன். அப்போது கடையின் பெயர் தான் அடகு கடை  ஆனால் அது மளிகைகடை என்பது தெரியவந்தது.

  இதையும் படிங்க : சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அமைச்சர் தகவல்

  பின்னர் வேறு வழியின்றி அதில் முக்கிய பொருள்களை எடுத்து தப்பினர். தொடர்ந்து ரிலையன்ஸ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு எதிர்பார்த்த அளவு எதுவும் கிடைக்கவில்லை. வெள்ளி பொருள்களை மட்டும் திருடி எடுத்துக் கொண்டு சென்றனர்.

  இதனைத்தொடர்ந்து, அடுத்த பகுதியான பர்மா காலனி பகுதிக்கு சென்று சகிலா என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து  5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை திருடி காரில் தப்பி தலைமறைவாகினர் .தொடர்ந்து அடுத்தடுத்த கைவரிசை காட்டிய திருடர்களை கண்டுபிடிக்க ஏ.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கிடைத்த சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையிலும் திருடிய கார்  குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இதையும் படிங்க :  மெகா கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு 1 சதவீதம் கூட இடமில்லை - ஈபிஎஸ் திட்டவட்டம்

  இந்நிலையில், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  ஞான அன்பு அரசு மற்றும் கலையரசன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கார் மற்றும் நகைகளை  பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடர் வழிப்பறியில ஈடுபட்டு வந்த  காரைக்குடி  பாக்கிய ரஞ்சித்(23),  திருப்பதி(22), திருச்சி புத்தூர் வண்ணாரபேட்டையை சேர்ந்த சரத்குமார்(22) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 4 பட்டா கத்தி, வீடியோ, ஸ்டில்கேமரா, சி.சி.டி.வி., ஸ்பீக்கர், தங்க நகை, மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். விரைந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை ஏ.எஸ்.பி.ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

  செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Sivagangai