ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

கீழடி அகழ் வைப்பகம் பணிகள் மும்முரம்... ஜனவரி மாதத்தில் திறக்க ஏற்பாடு

கீழடி அகழ் வைப்பகம் பணிகள் மும்முரம்... ஜனவரி மாதத்தில் திறக்க ஏற்பாடு

கீழடி

கீழடி

Sivaganga | கீழடி அகழ் வைப்பகத்தை ஜனவரி மாதம் திறக்க திட்டமிட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

கீழடி,கொந்தகை,மணலூர், அகரம் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்று வந்த 8 கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பர் 30 ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, அகழாய்வில் கண்டெடுக்க பொருட்களை கொண்டு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி பெறவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களைக் காட்சியகப்படுத்திட உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அகழ்வைப்பகம் அமைக்கும் பணி தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில்  கீழடி அகழ்வைப்பகம் அமைக்கும் பணிகள் ரூ.12.21 கோடி செலவில் தொடங்கப்பட்டது. மொத்தம் 31,919 சதுர அடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கட்டிடங்களில் கல், உலோகம், மணிகள், தந்த பொருள்கள், விலங்குகள் குறித்த தொல்பொருள்கள் மற்றும் சுடுமண் பானைகள் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளதோடு, அகழ்வைப்பகம் கட்டிடங்களின் வடிவமைப்பு அப்பகுதியில் உள்ள வீடுகளின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக முற்றம், தாழ்வாரம் மற்றும் மண்டபங்களுடன் அமைக்கப்படவுள்ளதாகவும், உள்ளூர் மக்களின் கலை மற்றும் கைவினை திறைமைகளை வெளிபடுத்தும் தோற்றத்துடனும் அமைக்கப்பட உள்ளது.

Also see... கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்..

கீழடியை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை உள்ளிட்ட  இடங்களில் நடைபெற்ற அகழாய்வு பணிகளும் செப்டம்பர் 30 ம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Keezhadi, Sivagangai