Home /News /sivagangai /

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... கணவன் மீது தீ வைத்த மனைவி கைது

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு... கணவன் மீது தீ வைத்த மனைவி கைது

கணவன் மீது தீ வைத்த மனைவி

கணவன் மீது தீ வைத்த மனைவி

Sivagangai : மானாமதுரையில் பயங்கரம் குடும்பப் பிரச்சினையில் கணவன் மீது தீ வைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மானாமதுரையில் குடும்பப் பிரச்சினையில் கணவன் மீது தீ வைத்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் லிங்கநாதன்(40). இவருடைய மனைவி அங்கயற்கண்ணி இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகின்றது. அவர்களுக்கு ஏழு வயதில் மகள் இருக்கிறாள்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு லிங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் மீது தீ எரிந்து கொண்டு இருந்ததே பார்த்த லிங்கநாதன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அருகில் உள்ள வீட்டில் போய் தன் மனைவி என் மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்து விட்டதாக கூறியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பெற்று வருகிறார்.

Must Read : இலங்கையில் 2வது நாளாக தொடரும் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக வந்து அதிபர் மாளிகையில் பொழுதை கழிக்கும் பொதுமக்கள்

இது குறித்து, மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், கணவனை மனைவியேதீ வைத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே தீ வைத்த சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Manamadurai, Sivagangai

அடுத்த செய்தி