சிவகங்கை மாவட்டம் CP காலனியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சுமதி. இளங்கோவன் கட்டிட தொழிலாளியாக கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு நகராட்சியில் இருந்து குடிநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இது வீட்டின் வெளியே அமைந்து உள்ளது .
இவரது மனைவி சுமதி சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு கால் எடுக்கபட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியில் வந்து தண்ணீர் பிடிக்க சிரமப்பட்டுள்ளார். இதே போல் நகராட்சியில் இருந்து தண்ணீர் எப்போது வரும் எப்போது திறந்து விடுவார்கள் என்று தெரியாமல் அவதிப்பட்டுள்ளார்.
அதனால் இது குறித்து யோசித்த கொத்தனர், தனது மனைவி கஷ்டபடாமலும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் தண்ணீரும் வீணாக கூடாது என்று தனது வீட்டில் உள்ள பொருட்களான வயர், சீலிங் பேனில் உள்ள கூம்பு வடிவத்தில் ஆன பொருட்களை வைத்து வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் குழாய் பகுதியில் ஒரு பாத்திரத்தை மாட்டி உள்ளார்.
இதனை மின்சாரம் மற்றும் பேட்ரியில் இயங்கக்கூடிய மாதிரி இணைப்பு கொடுத்து உள்ளார். தண்ணீர் எப்போது வருகிறதோ அப்போது தண்ணீர் அந்த பாத்திரத்தில் விழுந்த உடன் ஆட்டோமேட்டிக்காகவே உள்ளே இருக்கும் கருவியில் இருந்து சத்தம் கேட்கும். அதில் ஓபன் த டோர் என்ற வாய்ஸ் உடன் வீட்டிற்கு உள்ளே சத்தம் வரும். உடனடியாக தண்ணீர் வருகிறது என்று அறிந்து கொண்டு தண்ணீர் பிடிக்க வெளியே வந்துவிடலாம்.
Also see...சிவலிங்கத்தை வழிபட்ட சூரியக் கதிர்கள்! திருச்சியில் நடந்த அதிசயம்
பின்னர் தனக்குத் தேவையான தண்ணீர் கிடைத்த உடன் அவரது மனைவி பைப்லைன் ஐ அடைத்து விடுகிறார். இதனால் தண்ணீர் வீணாக வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. , மனைவிக்காக செய்த கருவி பயனாக உள்ளதாகவும் பெருமிதம் கொள்கிறார் கொத்தனார் இளங்கோவன். மேலும் தன்னைப் போன்று மற்ற வீடுகளிலும் இதேபோல் பயன்படுத்தினால் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தலாம் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Save Water, Sivagangai