Home /News /sivagangai /

100 ஏக்கரில் இருந்து 500 ஏக்கர்...முதுகலை பட்டதாரி முயற்சியால் வேப்பங்குள கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சி

100 ஏக்கரில் இருந்து 500 ஏக்கர்...முதுகலை பட்டதாரி முயற்சியால் வேப்பங்குள கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சி

முதுகலை பட்டதாரி முயற்சியால் வேப்பங்குள கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சி

முதுகலை பட்டதாரி முயற்சியால் வேப்பங்குள கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில், உழவர் உதவி மையம் மூலம், விவசாயிகளின் வீட்டுக்கே சென்று விதை நெல் வழங்கப்படுவது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது வேப்பங்குளம் கிராம வானம் பார்த்த பூமி ஆகும். தண்ணீர் பற்றாக்குறை ,விவசாய கூலி ஆட்கள் பிரச்சனையால் விவசாயத் தொழில் நலிவடைந்ததால் சிலர் விவசாயத்தை கைவிட்டு அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் அருகில் உள்ள ஆலம்பட்டு கிராமத்தை சேர்ந்த முதுகலைபட்டதாரியான திருட்செல்வம் அழிந்துவரும் விவசாய தொழிலை மீட்க திட்டமிட்டார். கடந்த 2019 ஆண்டு மீதம் இருந்த விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை செய்து விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

    பிரதான பிரச்சனையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர் மேலாண்மை திட்டத்தை கையில் எடுத்து கிராமத்தில் கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். அந்தாண்டு தமிழகம் முழுவதும் போதிய மழை இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் வேப்பங்குளம் கிராமத்தில் மட்டும் விவசாயிகளுக்கு நல்ல மகசூலை கிடைத்தது. அதன் மூலம் வருவாய் அதிகரித்தது, தொடர்ந்து விவசாய தொழிலில் உள்ள ஒவ்வொரு இடர்பாடுகளை களையும் விதமாக அரசு அதிகாரிகளின் உதவியுடன் முயற்ச்சித்து விளைவித்த நெல்லை விற்பனை செய்ய வேப்பங்குளம் கிராமத்திலேயே அரசு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து அரசு உதவியுடன் தமிழகத்தில் உழவர் உதவி மையத்தை கடந்தாண்டு ஏற்படுத்தினர் . மையத்தில் விவசாயிகளின் அடுத்தடுத்து தேவைகள் என்ன என்று புள்ளி விவரங்கள் சேகரித்து, அதன் மூலம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப குறைந்த விலையில் அரசு பரிந்துரைக்கும் தரமான நெல் விதைகளை மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கும் பணியை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நியூஸ்18செய்தி எதிரொலி: சிறுமி டான்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் வருகை

    மேலும் அடுத்த கட்டமாக உழவு , நடவு , விதைப்பு பணிகள் , உர தேவை குறித்து புள்ளி விவரங்கள் சேகரித்து அதற்கான தீர்வுக்கு உழவர் மையம் தயாராகி வருகிறது .இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 100 ஏக்கருக்குள் சுருங்கிய விவசாயம் தற்போது 500 ஏக்கர் என்று விரிவடைந்து வருகிறது மேலும் விவசாய தொழிலை விட்டு சென்றவர்களும் உழவர் உதவி மையம் செயல்பாடுகளால் மீண்டும் உழவு தொழிலுக்கு திரும்பி வந்துள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Agriculture, Farmers, Sivagangai

    அடுத்த செய்தி