காரைக்குடியில் சினிமா பாணியில் உணவகம் ஏற்பாடு செய்துள்ள பரோட்டா சாப்பிடும் போட்டி வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இடம்பெற்ற சூரியின் காமெடி காட்சியை போலவே, அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்படும் உணவகம் ஒன்று.
காரைக்குடியில் காளான் உணவுகளை மட்டுமே தயாரித்து வழங்கும் உணவகம் ஒன்று கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது அந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடை உரிமையாளர் அருள்தாமஸ் வெள்ளி , சனி , ஞாயிறு என 3 நாட்களுக்கு ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், ஒரு நபர் 12 கோதுமை பரோட்டா சாப்பிட்டால் அதற்கு பணம் தரத் தேவையில்லை என்றும் தவறும் பட்சத்தில் சாப்பிடும் புரோட்டாக்களுக்கான பணத்தை செலுத்தினால் போதும் என்றும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்டதும் சாப்பாட்டு பிரியர்கள் வந்து பரோட்டாவை ஒரு கை பார்க்க தொடங்கியுள்ளனர். இதில், சிலர் பரோட்டோ சூரி போல வெற்றி பெற்ற நிலையில், சிலர் அந்தளவுக்கு சாப்பிட முடியாமல், சாப்பிட்ட பரோட்டாவுக்கு மட்டும் பணத்தை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்த ஆஃபர் ஞாயிற்றுக்கிழமை (நாளை) வரை உண்டு என்பதால் இன்னும் அதிகமான அளவில் பரோட்டா பிரியர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(Sivagangai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.