ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

ஹெச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார்... 7 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஹெச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார்... 7 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

எச்.ராஜாவின் டுவீட்

எச்.ராஜாவின் டுவீட்

அதில், மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, எந்த விலங்கையும் துன்புருத்துவது குற்றமாகும், இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

    ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பதிவு தொடர்பாக  விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள இந்திய விலங்கு நல வாரியம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி வெளியிட்ட பதிவில், தன் வீட்டில் வளர்த்த அல்சேசன் நாய்க்கு வெறிபிடித்ததாகவும், அதனால்  நாய் பிடிப்பவரிடம் சொல்லி அதை மூங்கிலால் அடித்தபோது நாய் இறந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    ராஜா பதிவிட்ட டுவீட்

    இந்நிலையில், ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜாவின் மேற்கண்ட டுவிட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டத்தை இனி விளையாடினால் 3 மாதம் சிறை ; ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு அதிரடி 

    அதில், மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும், இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Animal activism, HRaja, Pet Animal