ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

உணர்ச்சி, கவர்ச்சி தான் இருக்கு... வளர்ச்சி இல்லை - கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்

உணர்ச்சி, கவர்ச்சி தான் இருக்கு... வளர்ச்சி இல்லை - கார்த்தி சிதம்பரம் ஆதங்கம்

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ராஜா எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவை இல்லாத சர்ச்சை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது, வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை  என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மேலும், 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ராஜா எந்த மதத்தை சேர்ந்தவர் எப்படி இருந்தர் என்பது தேவை இல்லாத சர்ச்சை எனவும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் எம்.பி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

பின்னர் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை.    உயர்ந்த மின் கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்ற விவாதங்களுக்கு அரசியல் மேடையில் இடம் கிடையாது.  கல்வியில் எவ்வாறு சீர்திருத்தம் கொண்டுவரலாம் என்பது குறித்து விவாதிப்பதில்லை.  500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட ராஜா எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது தேவை இல்லாத சர்ச்சை என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை என பேசினார் .அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு மேடையில் எவ்வாறு பேசவேண்டும் என பழுத்த அரசியல்வாதிகளுக்கு நான் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

Published by:Murugesh M
First published: