முகப்பு /செய்தி /சிவகங்கை / திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை.. நண்பர் வெறிச்செயல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை.. நண்பர் வெறிச்செயல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கொலை செய்தவர் - கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்தவர் - கொலை செய்யப்பட்டவர்

Sivakasi murder | மது அருந்தி கொண்டிருந்த போது உடல் தோற்றத்தை கேலி செய்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivakasi, India

சிவகாசி அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த  மணிகண்டன் (29) கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த  தனது நண்பரான முத்துராஜ் (38) என்பவருடன் மணிகண்டன் மது அருந்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறன் கொண்ட முத்துராஜின் உடல் குறைபாட்டை மணிகண்டன் கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற  மாரனேரி காவல் நிலைய போலீசார் கொலை செய்த முத்துராஜை கைது செய்து நடத்திய விசாரணையில் தனது உடல் ஊனத்தை கிராமத்தில் பலரும் கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் மணிகண்டனும் தன்னை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராட்சசன் திரைப்படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வரும் நபர் தனது உடல் தோற்றத்தை கேளி செய்ததால் கொலை செய்ய தொடங்குவார். அதே போன்று அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்: செந்தில்குமார், சிவகாசி.

First published:

Tags: Crime News, Death, Local News, Murder, Sivagangai