ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் கொடூர கொலை.. சிவகங்கையில் பயங்கரம்..!

நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் கொடூர கொலை.. சிவகங்கையில் பயங்கரம்..!

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga | Sivaganga | Tamil Nadu

சிவகங்கையில் நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே நள்ளிரவில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இவரது நண்பரது ஊரான மட்டாகுளத்தில் தங்கி வந்ததுடன் அங்குள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனை அறிந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று நள்ளிரவில் மாடிக்கு சென்று, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஆகாஷ் தலையில் வெட்டி சிதைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதையும் படிங்க | Watch - துப்பாக்கி முனையில் சொகுசுகார் பறிப்பு... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சத்தம் கேட்ட கிராமத்தினர் காவல்துறைக்கு தகவல் தரவே உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Murder, Sivagangai