ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

சட்னியில் பல்லி... ஓட்டலில் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி..!

சட்னியில் பல்லி... ஓட்டலில் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி..!

சட்னியில் கிடந்த பல்லி

சட்னியில் கிடந்த பல்லி

பட்டுக்கோட்டையை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் என்பவர் உணவு சாப்பிடும்போது, அவர் சாப்பிட்ட சட்னியில் பல்லி இறந்து கிடந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Manamadurai, India

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் பயிற்சிக்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் தனியார் உணவகத்தில் உணவு சாப்பிடும்போது உணவில் பல்லி இருந்துள்ளது. இந்நிலையில், அது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் மறைக்க முற்பட்டதால், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டாரங்களை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சிறந்த ஊராட்சிகள் குறித்த பட்டய பயிற்சிக்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சிறந்த ஊராட்சிமன்றங்களுக்கு தொடர் சுற்றுப்பயனம் மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் காலை சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் வந்த 150 க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள்  பேருந்து நிலையம் அருகேவுள்ள பிரபல தனியார் உணவகத்திற்கு சென்று காலை உணவு அருந்தினர்.

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!

பட்டுக்கோட்டையை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் என்பவர் உணவு சாப்பிடும்போது, அவர் சாப்பிட்ட சட்னியில் பல்லி இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உணவக ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்காமலும், அந்த பல்லி விழுந்த உணவை வெளியே கொண்டு சென்று கொட்டி மறைத்துள்ளனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பை தமிழருக்கே வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இதன்பின்னர் உடனடியாக அங்குவந்த உணவு பாதுகாப்பு துறையினர் உணவுகளை வேதியியல் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். மேலும் காவல்துறையினரும் வந்து அவர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றதுடன் உணவக ஊழியர்களிடம் விசாரனை மேற்கொண்டனர்.

செய்தியாளர் - சிதம்பரநாதன், சிவகங்கை

Published by:Musthak
First published:

Tags: Sivagangai