Home /News /sivagangai /

108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தைகள் - குவியும் பாராட்டு!

108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தைகள் - குவியும் பாராட்டு!

108-ல் பிறந்த இரண்டை குழந்தை

108-ல் பிறந்த இரண்டை குழந்தை

Sivagangai : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரசவ வலியுடன் 108 வாகனத்தில் மருத்துவமனை நோக்கி சென்ற பெண்ணுக்கு வழியிலேயே இரட்டை குழந்தை பிறந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ரோஜா (24). நிறை மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக எஸ்.புதூர் 108 வாகனத்தை அழைத்துள்ளார். ஓட்டுநர் பிரபு, மணி விரைந்து பிரான்பட்டிக்கு சென்று அங்கிருந்து ரோஜாவை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள புழுதிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்ப்பதற்காக சென்றனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுவரும் வழியில், பெண்ணுக்கு வலி அதிகமானதால்108 வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் மணி ரோஜாவுக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு  ஓட்டுநர் பிரபு உதவிகள் புரிந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ரோஜாவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பின்பு புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

    108 ஆம்புலன்சிஸ் பிறந்த இரட்டை குழந்தை


    Must Read : நிமிர்ந்து பார்த்தாலே அடிதான்.. இரவு முழுவதும் சித்ரவதை - கோவை தனியார் அறக்கட்டளை ஊழியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய் மற்றும் இரட்டை குழந்தைகளை காப்பாற்றிய 108 வாகன ஓட்டுனர் பிரபு மற்றும் மருத்துவ உதவியாளர் மணி ஆகியோரை மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர் - முத்துராமலிங்கம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ambulance, Sivagangai, Twins

    அடுத்த செய்தி