முகப்பு /செய்தி /சிவகங்கை / தண்ணீர் தேடி வந்த மான்கள்... ரயிலில் அடிபட்டு பலியான சோகம்!

தண்ணீர் தேடி வந்த மான்கள்... ரயிலில் அடிபட்டு பலியான சோகம்!

மான்கள் உயிரிழப்பு

மான்கள் உயிரிழப்பு

Train accident | தண்டவாளத்தை கடக்க முயன்ற போது 4 மான்களும் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை அருகே தண்ணீர் தேடி வந்த 4 மான்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதி ரயில் தண்டாவளத்தில் இன்று காலை காட்டுப் பகுதியில் இருந்து 4 மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஊருக்குள் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் தண்டாவளத்தை கடக்க முற்பட்ட போது மதுரையில் இருந்து மண்டபம் சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 மான்களும் அடிபட்டு உயிரிழந்தது.

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றஅவர்கள் இறந்த மான்களின் சடலத்தை கைபற்றி கொண்டு சென்றனர்.

இது குறித்து பேசிய கிராம மக்கள், வனத்துறை சார்பில் காட்டுப் பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி கட்டி வைத்து தண்ணீர் வைப்பது வழக்கம். தற்போது வைக்கப்படாததால் காட்டை விட்டு வெளியேறி ஊர்க்குள் வந்து வனவிலங்குகள் உயிரிழப்பது தொடர்கதை ஆகியுள்ளது. உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: சிதம்பரநாதன், சிவகங்கை.

First published:

Tags: Deer, Local News, Sivagangai, Train Accident