முகப்பு /செய்தி /சிவகங்கை / இன்று முதல் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்... சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இன்று முதல் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்... சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

சிவகங்கையில் 144 தடை உத்தரவு

சிவகங்கையில் 144 தடை உத்தரவு

Sivagangai | தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர்கள் நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (அக்டோபர் 23) முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

  • Last Updated :
  • Sivaganga | Sivaganga | Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (அக்டோபர் 23) முதல் வரும் 31ம் தேதி வரையிலான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

மருது சகோதரர்களின் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று முதல் 9 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருது சகோதரர்களின் நினைவு தினமும், தொடர்ந்து வரும் 27ம் தேதி  காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது.

top videos

    இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அதனை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், வரும் 31ம் தேதி வரையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    First published:

    Tags: Lockdown, Sivagangai