முகப்பு /செய்தி /சிவகங்கை / ஓடோடி உதவி செய்த சேர்மன் வீட்டு கல்யாணம்.. 504 கிடா.. ஆள் உயர குத்துவிளக்கு என சீர்வரிசை செய்து அசரவைத்த சிவகங்கை மக்கள்!

ஓடோடி உதவி செய்த சேர்மன் வீட்டு கல்யாணம்.. 504 கிடா.. ஆள் உயர குத்துவிளக்கு என சீர்வரிசை செய்து அசரவைத்த சிவகங்கை மக்கள்!

சீர்வரிசை செய்த சிவகங்கை மக்கள்

சீர்வரிசை செய்த சிவகங்கை மக்கள்

Sivagangai News : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றிய கிராம மக்கள் சீர் செய்யும் விழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பொன்னடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன். மணி பாஸ்கரன். அதிமுகவை சேர்ந்த இவர் சிவகங்கை மாவட்ட சேர்மனாக உள்ளார். இதனிடையே, கடந்த கொரோனா நேரத்தில் இந்த பகுதியில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதி மக்களுக்கு  வீடுகளுக்கு ஓடோடி சென்று அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து இந்த பகுதி மக்களின் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், இவரின் மகள் ஹரிப்பிரியாவுக்கும், ஜெயக்குமாருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதனுடைய திருமண வரவேற்பு விழா குன்னத்தூர் அருகே ஓவிஎம் கார்டனில் இன்று  நடைபெறவுள்ளது. இதன் காரணமாக எஸ்.புதூர் ஒன்றிய மக்கள் சார்பாக பொன். மணி பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு விழாவை அசத்தும் விதமாக  கிராம மக்கள் சீர் செய்யும் விழா நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இந்த சீர்வரிசையில் 504 ஆட்டுக்கிடா, ஆளுயுர குத்துவிளக்கு, தாமிர பானை சேலை, காய்கறி, பழங்கள்,  உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அந்த பகுதி மக்கள் குன்னத்தூர் கண்மாய் சாலையில் இருந்து தப்புத்தாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆட்டம்பாட்டத்துடன் கொண்டு வந்தனர். சீர் கொண்டு வந்த மக்கள் அனைவரையும் பொன். மணி பாஸ்கரன் குடும்பத்தார் நன்றி கூறி கைகூப்பி வரவேற்றனர். தொடர்ந்து, எஸ்.புதூர் ஒன்றிய மக்கள் சார்பில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களால் எடுக்கப்பட்ட இந்த சீர்வரிசை ஊர்வலம் அனைவரது கவனத்தையும் பெற்றது.

செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி

First published:

Tags: Local News, Sivagangai