Home /News /sivagangai /

அங்கீகாரம் கிடைத்துவிட்டது... பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு நரிக்குறவர்கள் மகிழ்ச்சி

அங்கீகாரம் கிடைத்துவிட்டது... பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு நரிக்குறவர்கள் மகிழ்ச்சி

சிவகங்கை நரிகுறவர்கள்

சிவகங்கை நரிகுறவர்கள்

Sivaganga | தங்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க  வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்க்கு எங்கள் சமுகம் சார்பாக நன்றியை தெரிவித்தி கொள்ளுகின்றோம். எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என சிவகங்கையில் உள்ள நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நரிக்குறவர் சமுதாயத்தினர் அதிகளவு வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருப்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர். எனவே, தங்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நரிக்குறவர் சமூகத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோன்று குருவிக்கார சமூகத்தினரும் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஷெட்யூல்டு பழங்குடியினரின் பட்டியலை திருத்தி அமைக்க அரசியலமைப்பு சட்டத்தின் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆணை 1950-ல் சில திருத்தங்களை செய்வதற்காக நாடாளுமன்றத்தில், “அரசியல் சட்ட (ஷெட்யூல்டு பழங்குடியினர்) ஆணை (இரண்டாவது திருத்த) மசோதா 2022-ஐ” தாக்கல் செய்ய பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



தமிழ்நாட்டின் ஷெட்யூல்டு பழங்குடியினர் பட்டியலில் கீழ்காணும் திருத்தம் செய்யப்படும். தமிழ்நாட்டின் ஷெட்யூல்டு பழங்குடியினர் பட்டியலின் வரிசை எண் 37-ல் ‘நரிக்குறவன், குருவிக்காரன்’ என்ற சமூகங்களை சேர்த்தல், இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்ட பின், தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட ஷெட்யூல்டு பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், ஷெட்யூல்டு பழங்குடியினருக்கான மத்திய அரசின் தற்போதைய நலத்திட்டங்களின் பயன்களை பெறுவது என அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.



பயன் பெறும் நலத்திட்டங்கள் என்னென்ன?

மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடமிருந்து  சலுகைக் கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்றவை சில முக்கிய திட்டங்கல் இதில் அடங்கும். மேலும் அரசு கொள்கையின்படி, இவர்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கை ஆகியவற்றின் பயன்களையும் பெறமுடியும்.



Also see...ஆரணியில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

இது குறித்து சிவகங்கை பையூர் பிள்ளைவயல் பழமலை நகர் பகுதியில் குடியிருக்கும் நரிகுறவர் இன மக்கள் கூறிகையில், “  பல ஆண்டுகளாக எந்த வித சலுகை இல்லாமல் போராடி வந்தோம். இதனால் எங்கள் பிள்ளைகள் உயர் படிப்பிற்க்கு செல்வதற்கு தடையாகவும் சலுகை இல்லாமல் அவதிபட்டு வந்தோம். நேற்று வெளியான இந்த அறிவிப்பு எங்கள் சமுக மக்களுக்கு ஒரு அங்கீகாரம் என்றும் இதற்கு பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எங்கள் சமுகம் சார்பாக நன்றியை தெரிவித்தி கொள்ளுகின்றோம். எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CM MK Stalin, Sivagangai

அடுத்த செய்தி