முகப்பு /செய்தி /சிவகங்கை / மக்களே உஷார்.. செல்போன் SMS மூலம் லட்சக்கணக்கில் திருட்டு.. சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்..!

மக்களே உஷார்.. செல்போன் SMS மூலம் லட்சக்கணக்கில் திருட்டு.. சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்..!

எஸ்எம்எஸ் மோசடி

எஸ்எம்எஸ் மோசடி

Sivagangai Fraud Gang Arrest | இந்த வழக்கில் 17 பேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் இருந்து ஆயிரம் சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் தனது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ் லிங்கை கிளிக் செய்ததால் அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மாயமானது. இது தொடர்பான புகாரில் விசாரணை செய்த சைபர் க்ரைம் பிரிவு போலீஸார், கோவை பீளமேடு பகுதியில் செயல்படும் ஒரு நிறுவனம் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர்.

சரவணன் மற்றும் பாரதி என்ற தம்பதி 5 பெண்களை வேலைக்கு வைத்து நாள் ஒன்றுக்கு 3 லட்சம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வந்துள்ளனர்.   எஸ்எம்எஸ் லிங் அனுப்பப்பட வேண்டிய செல்போன் எண்களை டெல்லியை சேர்ந்த சையது ரஹீப் குர்ஷீத் என்பவர் கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 30 கம்ப்யூட்டர்கள், சுமார் 300 செல்போன்கள், 25 ஆயிரம் சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் இந்தியா முழுவதும் சைபர் கிரைம் பண மோசடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் மேலும் விசாரனையை தொடர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Cyber crime, Sivagangai