ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்.. திருப்பத்தூரில் பகீர் சம்பவம்

மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்.. திருப்பத்தூரில் பகீர் சம்பவம்

மனைவியை கொன்ற கணவர்

மனைவியை கொன்ற கணவர்

கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  திருப்பத்தூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வலையபட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (48). இவர் விவசாய வேலைகள் பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் செல்வம் (55)  விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். செல்வம் சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நள்ளிரவில் மனைவியை வீட்டின் வாசலுக்கு அழைத்த செல்வம், வீட்டில் இருந்த அருவாளை எடுத்து திடீரென மல்லிகாவின் தலையில் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மல்லிகா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதையும் படிங்க | நாமக்கல்லில் வீடு புகுந்து ரூ. 25 லட்சம் ரொக்கம்.. 18 சவரன் கொள்ளை - மர்ம கும்பல் அட்டூழியம்

  மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், கணவர் செல்வத்தை காவல் நிலையம்  அழைத்துச் சென்று  கொலை குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம் துரைராஜ்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Murder, Sivagangai