சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை இருக்கையில் அமரவைக்காமல் தரையில் அமரவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்தும், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நரிக்குறவ இன மக்கள் அளித்த மனு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தமிழக அரசின் சார்பில் விளம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நரிக்குறவர் மக்களுக்கு நிலையான இருப்பிடத்தினை ஏற்படுத்துவதற்காக இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.06.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சிவகங்கை பழமலை நகரைச் சேர்ந்த 23 நபர்கள் மற்றும் தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த 50 நபர்கள் அடங்கிய 2 குழுவினர் வருகை புரிந்தனர். அதில் 23 நபர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுமனைப்பட்டா வழங்கியது தொடர்பாக விளக்கம் கோரி மனு அளித்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு 1 சென்ட் இடம் வீதம் 107 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு இருந்த நிலையில் வீடு கட்டுவதற்கு தேவையான அளவு இடவசதி இல்லாத காரணத்தினால் வழங்கப்பட்ட ஆணை திரும்பப் பெறப்பட்டு, கூடுதல் இடவசதியுடன் கூடிய வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு 2021 டிசம்பரில் 2½ சென்ட் வீதம் 24 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 12.05.2022, 20.05.2022 மற்றும் 24.05.2022 ஆகிய தினங்களில் 3 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 08.06.2022 அன்று 91 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டன.
நடைபெற்ற சிறப்பு முகாம்களின் போது தொழிலுக்காக வெளியூர் சென்று இருந்தவர்கள், வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் விடுபட்டவர்கள் வீட்டுமனைப்பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்களின் குழுத்தலைவர் மாணிக்கம் அவர்களுடன் வருகை தந்தனர்.
குழுத்தலைவர் மற்றும் 6 நபர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்களை சந்தித்து மனு அளித்தனர். அச்சமயத்தில் மீதமுள்ள நபர்கள் தரைதளத்தில் தங்களது குழுத்தலைவர் மற்றும் தங்களது குழுவினருக்காக காத்திருந்திருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர்களை இருக்கையில் அமரக்கூடாது என்றோ, தரையில் உட்காருமாறோ யாரும் வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை. அதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை. நரிக்குறவர் குழுத்தலைவர் மாணிக்கம் அவர்களை தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
Must Read : மனைவிக்கு கொரோனா தொற்று... நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்தி கொண்ட ஈபிஎஸ்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில அனைவரையும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சமஉரிமை மற்றும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். நரிக்குறவர் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது 29.06.2022 சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: District collectors, Sivagangai