ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து... பிரசவத்துக்கு சென்ற கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து... பிரசவத்துக்கு சென்ற கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

ஆம்புலன்ஸ் விபத்தில் பலியானவர்கள்

ஆம்புலன்ஸ் விபத்தில் பலியானவர்கள்

108 Ambulance Accident | ஊத்திகுளம் அருகே சென்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  சிவகங்கை மாவட்டம் ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன், நிவேதா தம்பதி நிவேதா தற்சமயம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நிவேதா அவரது தாயார் விஜயலெட்சுமி, மற்றும் நிவேதாவின் சகோதரி திருச்செல்வி ஆகியோர் 108 வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

  இந்நிலையில், 108 வாகனத்தை மலையரசன் என்ற ஓட்டுநர் மற்றும் டெக்னிசியன் சத்யா ஆகியோர் இயக்கிவந்த நிலையில் ஊத்திகுளம் அருகே சென்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் அனைவரும் படுகாயமடைந்த் நிலையில் உடனடியாக மற்றொரு 108 வாகனம் வரவழைக்கப்பட்டு அனைவரும் அதில் சென்றனர்.

  இதையும் படிங்க : 100 ஏக்கரில் இருந்து 500 ஏக்கர்...முதுகலை பட்டதாரி முயற்சியால் வேப்பங்குள கிராமத்தில் விவசாய மறுமலர்ச்சி

  அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பிணி பெண் நிவேதா அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவித்ததுடன் நிவேதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தையும் உயிரிழந்தது.

  மேலும் நிவேதாவின் சகோதரி திருச்செல்வி மற்றும் ஓட்டுநர் மலையரசன், டெக்னிசியன் சத்யா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Accident, Ambulance, CM MK Stalin, Sivagangai