ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

நள்ளிரவில் கொள்ளையரிடம் மல்லுக்கட்டிய மாமியார், மருமகள்... வெட்டி கொன்று நகைகளுடன் தப்பியோடிய பயங்கரம்!

நள்ளிரவில் கொள்ளையரிடம் மல்லுக்கட்டிய மாமியார், மருமகள்... வெட்டி கொன்று நகைகளுடன் தப்பியோடிய பயங்கரம்!

கொலை செய்யப்பட்டவர்கள்

கொலை செய்யப்பட்டவர்கள்

Devakottai murder | சிவகங்கை அருகே மிளகாய் பொடி தூவி வீட்டில் இருந்த மூவரை வெட்டி விட்டு மர்மநபர்கள் 46 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga | Sivaganga

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்  கனகம்அம்மாள்(65.) இவரின் மகன் குமார் (40) மலேசிய நாட்டில்  வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். குமாரின் மனைவி வேலுமதி(35), மகன் மூவரசு(12) மற்றும் கனகம் அம்மாள் ஆகிய மூவரும் கண்ணங்கோட்டையில்  வசித்து வருகின்றனர்.இன்னும் 15 நாட்களில் கனகம் அம்மாள் மகள் வழி பேத்தி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக இரு  நாட்களுக்கு முன்  40  பவுன் நகை எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் மூவரும் வீட்டில் உறங்கி உள்ளனர். வீட்டில் நகை உள்ளதை அறிந்த மர்மநபர்கள் சிலர், நள்ளிரவில் வீடு புகுந்து மயக்க ஸ்பிரே அடித்து உள்ளனர். அப்போது மூதாட்டி கனகம்மாள் மற்றும் வேலுமதி  இருவரும் சுதாரித்து  எழுந்து மர்ம நபர்களுடன் மல்லு கட்டியதாக கூறப்படுறது. இதில் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மூவரையும் வெட்டி விட்டு பீரோவில் இருந்த 46  பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பி தலைமறைவாகினர்.

காலையில் பேத்தி திருமணத்திற்கு மட்டன் ஆர்டர் குறித்து பேச வர சொன்னதால் காவனவயலை சேர்ந்த பெரியசாமி என்பவர்  கண்ணங்கோட்டை கனகம்அம்மாள்  வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில்  ரத்த வெள்ளத்தில் வேலுமதி, மூதாட்டி கனகம்மாள் கிடந்தது கண்டு கூச்சலிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவகோட்டை காவல்துறையினர் உயிருக்கு போராடிய கனகம்மாள் மயக்க நிலையில் கிடந்த சிறுவன் மூவரசை மீட்டு தேவகோட்டை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வேலுமதியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிவகங்கைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கனகம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து விசாரணையில், வீட்டில் உள்ள பீரோ அலமாரி உடைத்துவிட்டு தப்பிய மர்ம கும்பல் தடயங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க வீட்டைச் சுற்றி மிளகாய் பொடி தூவி தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த டி ஐ ஜி துரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தங்கதுரை மற்றும்  காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் ஐ.பி.எஸ்  உள்ளிட்டோர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து மர்மநபர்களை திவீரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், சிவகங்கை.

First published:

Tags: Crime News, Local News, Sivagangai, Sivakasi