முகப்பு /செய்தி /சிவகங்கை / சிவகங்கையில் அரசுப்பேருந்து மீது மோதிய ஷேர் ஆட்டோ.. 5 பெண்கள் படுகாயம்..

சிவகங்கையில் அரசுப்பேருந்து மீது மோதிய ஷேர் ஆட்டோ.. 5 பெண்கள் படுகாயம்..

பேருந்தில் மோதி நிற்கும் ஷேர் ஆட்டோ

பேருந்தில் மோதி நிற்கும் ஷேர் ஆட்டோ

Sivagangai News : சிவகங்கை அருகே நின்று கொண்டுடிருந்த பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை அருகே நின்றுகொண்டிருந்த பேருந்து மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பம், பாக்கியம், கலையரசி, கயல்விழி, அகல்யா ஆகியோர் ஷேர் ஆட்டோவில் வஞ்சிநகரத்தில் உள்ள உறவினர்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ள சக்கந்தி வழியாக சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கருப்பு என்பவர் ஓட்டினார்.

சக்கந்தி அருகே சென்றபோது ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து  குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Crime News, Local News, Sivagangai