ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

சிவகங்கை கண்மாயில் பதுக்கிய ரூ.3 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்

சிவகங்கை கண்மாயில் பதுக்கிய ரூ.3 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்

யானையின் தந்தம் பறிமுதல்

யானையின் தந்தம் பறிமுதல்

Sivaganga | சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய்க்குள் பதுக்கிய பல கோடி மதிப்புள்ள 9.46 கிலோ எடை யுள்ள யானை தந்தங்களை சிவகங்கை வனத்துறையினர் மீட்டு கடத்திய 3 பேரை கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  பெங்களூரூவில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக சென்னை தமிழ்நாடு வனத்துறை நுண்ணரிவு மற்றும் புலனாய்வு பிரிவு, மதுரை வனக்காவல் படை, விருதுநகர் வன பாதுகாப்பு படை, சிவகங்கை மாவட்ட  வனப்பணியாளர்கள் சிவகங்கை வனச்சரக பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தனிக்குழுக்கு கிடைத்த தகவலின் படி, சந்தேகத்தின் பேரில் மானாமதுரை அருகே கீழப்பசலை சங்கர் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

  அவர் திருப்பூர் ஜெயக்குமார், விருதுநகர் வடமலை குறிச்சி    கணேஷ்பாண்டியன் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து யானை தந்தங்களை பெற்று வந்துள்ளதாகவும், கோடிக்கணக்கில் விற்பனை செய்வதற்காக காளையார்கோவில் அருகே மணியங்குடி கண்மாயில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

  கண்மாயை தோண்டி ரூ.3 கோடி மதிப்புள்ள  9.46 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களையும், அதை கடத்திய காரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

  Also see... மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவை மக்கள்... வைரலாகும் புகைப்படம்

  சங்கர், ஜெயக்குமார், வடமலைகுறிச்சி கணேஷ் பாண்டியன் ஆகிய மூவரையும் கைது செய்து, சிவகங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sivagangai