ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

மதுபோதையில் தாறுமாறாக பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்... மடக்கி பிடித்த பொதுமக்கள்...

மதுபோதையில் தாறுமாறாக பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர்... மடக்கி பிடித்த பொதுமக்கள்...

பள்ளி வாகன ஓட்டுநர்

பள்ளி வாகன ஓட்டுநர்

Karaikkudi | பள்ளி குழந்தைகளுடன்  பேருந்தை குடிபோதையில் தாறுமாறாக ஒட்டி வந்த ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karaikkudi (Karaikudi), India

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காந்தி வீதியில் இன்று காலை தீபாவளி முடிந்து குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல  அமராவதி புதூரில் உள்ள ராஜ ராஜன் சிபிஎஸ்சி என்ற பள்ளியின் தனியார் பள்ளி பேருந்தை ரங்கநாதன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்துள்ளார். அப்பொழுது அந்தப் பள்ளி பேருந்து தாறுமாறாக சாலையில் வந்துள்ளது.

  இரு சக்கர வாகனத்தை இடித்துவிட்டு பள்ளி பேருந்து வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் பள்ளி பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். பேருந்துக்குள் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மாணவர்கள் இருப்பதை பார்த்தனர். பேருந்து  ஓட்டுனர் ரங்கநாதன் முழு மதுபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டி வந்ததை கண்டுஅதிர்ச்சி மக்கள் அடைந்தனர்.

  Also see...காற்று மாசுவால் ஆண்களை விட பெண்களுக்கே நுரையீரல் பாதிப்பு அதிகம்

  உடனடியாக காவல்துறையினருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும்  தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு  வந்த காவல் துறையினர் ரங்கநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் பள்ளியில் இருந்து மாற்று  பேருந்தை வரவழைத்து  குழந்தைகளை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம்,காரைக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Karaikudi, School Bus, Sivagangai