Home /News /sivagangai /

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கடித்து கொன்று உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி உயிர் நீத்த வளர்ப்பு நாய்...

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கடித்து கொன்று உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி உயிர் நீத்த வளர்ப்பு நாய்...

செவலை நாய்

செவலை நாய்

Sivagangai District : சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் உயிரை காக்க, வளர்ப்பு நாய் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை கடித்து கொன்று விஷம் ஏறி உயிரை நீத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகேயுள்ளது கீழப்பூங்குடி கிராமம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியம். இவர் வீட்டில் 4 நாய்களுக்கும் மேலாக வளர்த்துவரும் நிலையில் செவலை என்கிற நாய் மிகவும் நன்றியுள்ள நாயாகவும் துடிப்பாகவும் இருந்துள்ளது. மேலும் சரவணன் வளர்த்துவரும் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க செல்லும்போது காளையின் கூடவே சென்று வீட்டிற்கு மீண்டும் கூட்டிக்கொண்டு வருமாம் இந்த செவலை.

இந்நிலையில் கடந்த புதனன்று மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து விரட்ட முயன்றுள்ளது. ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு இறந்ததும் பாம்பு தீண்டியதால் நாயும் மயங்கி விழுந்துள்ளது.

தன் உயிரை தியாகம் செய்து குழந்தைகளை காப்பாற்றிய செவலை நாய்


இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிடவே பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாய் இறந்ததாக கூறவே கண்ணீர் வடித்த குடும்பத்தினர் நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

Also see...செங்கல்பட்டில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழப்பு

குழந்தைகளின் உயிரை காக்க பாம்பை கடித்துக்கொன்று தன்னுயிரை நீர்த்த நாயால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Dog, Sivagangai, Snake

அடுத்த செய்தி