முகப்பு /செய்தி /சிவகங்கை / பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம்.. காரைக்குடியில் வட்டாட்சியர், டி.எஸ்.பி பணியிட மாற்றம்!

பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரம்.. காரைக்குடியில் வட்டாட்சியர், டி.எஸ்.பி பணியிட மாற்றம்!

அகற்றப்பட்ட பெரியார் சிலை

அகற்றப்பட்ட பெரியார் சிலை

Sivagangai News : காரைக்குடியில் அனுமதியின்றி வைத்த பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் டி.எஸ்.பி மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது வீட்டில் பெரியாரின் மார்பளவு சிலையை அமைத்திருந்தார். இதை திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைக்க இருந்திருந்தார். இதனிடையே, பெரியார் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் சிலர் பள்ளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன், இளங்கோவனின் வீட்டில் இருந்த பெரியார் சிலையை வருவாய் துறையினர் அகற்றினர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, அனுமதி பெறும் வரை சிலையை எடுத்து வைக்குமாறு இளங்கோவனிடம் அறிவுத்தியும், அவர் எடுத்து வைக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால், அரசு விதிகளின்படி, சிலை அகற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய முறையில் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில், பெரியார் சிலை அகற்றப்பட்ட நிலையில், வருவாய்துறை மற்றும் காவல்துறையில் முக்கிய பணியில் இருந்த அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் கண்ணனை, சிவகங்கை மாவட்ட வனத்திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.  இதேபோல், தேவகோட்டையில் காவல்துறை பொறுப்பு துணை கண்காணிப்பாளராக இருந்த கணேஷ்குமார் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Sivagangai