ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

ஆடு திருட்டு: இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்! 

ஆடு திருட்டு: இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்! 

ஆடு திருடியவர்களை அடித்த இளைஞர்கள்

ஆடு திருடியவர்களை அடித்த இளைஞர்கள்

ஆடுகள், டூவீலரை எடுக்க மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்தனர் இதை கண்காணித்த கிராம இளைஞர்கள் டூவீலர் ஆடுகளை எடுக்கும் பொழுது மறைத்து இருந்து பிடித்தனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga, India

  ஆடு திருடியவர்களுக்கு உதவ வந்தவர்களை அந்த ஊர் இளைஞர்கள் கம்பு உடையும் அளவுக்கு அடி கொடுத்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வேட்டைக்காரன் பட்டியில் டூவிலரில் வந்த இருவர் அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிக் கொண்டு டூவீலரில் தப்பிச்சென்றனர். ஆடுகளை திருடியவர்களை அப்பகுதி இளைஞர்கள் பின் தொடர்ந்து விரட்டினர். ஒரு கட்டத்தில் அமராவதிபுதூர் கல்லுப்பட்டி சாலையில் ஆடு திருடி சென்றவர்களின் டூவீலர் பழுதாகவும் ஆடுகளை இறக்கிவிட்டு திருடிய இளைஞர்கள் அருகில் உள்ள காட்டுக்குள் சென்று தலைமறைவாகினர்.

  பின் ஆடு திருடியவர்கள் சக நண்பர்களுக்கு போன் செய்து டூவீலர் பழுதாகி விட்டது  ஆடுகளை வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து ஆடுகள், டூவீலரை எடுக்க மூன்று இளைஞர்கள் பைக்கில் வந்தனர். இதை கண்காணித்த கிராம இளைஞர்கள் டூவீலர் ஆடுகளை எடுக்கும்போது மறைந்திருந்து பிடித்து அந்த  மூன்று இளைஞர்களை பிடித்து  தர்ம கொடுத்தனர்.

  பிறகு, ஆடு திருடியவர்களுக்கும்  உங்களுக்கும் என்ன தொடர்பு என விசாரித்தனர். தொடர்ந்து குற்ற பிரிவு காவல்துறையிடம் அவர்களை மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.

  இதற்கிடையே இந்த ஆடு திருடியவர்களை இளைஞர்கள் கம்பால் அடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி வருகிறது.

  செய்தியாளர் : முத்துராமலிங்கம்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Snatchers, Snatching, Theft, Thief