சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திரதினத்தையொட்டி நடந்த பாதயாத்திரையில் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, “ காங்கிரஸ் பாதயாத்திரையானது 75-வது சுதந்திர தினத்தை வலியுறுத்தியும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் குறித்து மக்களிடம் கொண்டு செல்லவும், மத்திய அரசை கண்டித்தும் நடக்கிறது.
நாட்டின் மொத்தம் விலைவாசி உயர்வு 15 சதவீதம், சில்லறை விலைவாசி உயர்வு 7 சதவீதம். பொதுவாக மின்சாரத்தை தொட்டால் தான் ‘ஷாக்’ அடிக்கும். ஆனால் தற்போது எந்த பொருளை தொட்டாலும் ‘ஷாக்’ அடிக்கிறது. ஏழை, எளிய மக்கள் எந்தளவிற்கு துன்பப்படுகின்றனர் என்பதை தெருவில் நடந்தால் தெரியும்.
தற்போது மொத்த வேலையின்மை 8 சதவீதத்தை தாண்டியுள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர். 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்லாயிரம் சிறு, குறு நிறுவனங்களை மூடிவிட்டனர். 5,000 நிறுவனங்கள் இருந்த நகரில் தற்போது 500 நிறுவனங்கள் தான் உள்ளன. பல கோடி பேர் வேலையிழந்துள்ளனர். வேலையின்மைக்கு பாஜகவும், மோடியும் தான் காரணம். இதில் எங்களுக்கு பொறுப்பு இல்லையென பாஜக தப்பியோட முடியாது” என்றார்.
Also see... அதிக கட்டணம் வசூலிக்கும்ஆம்னி பேருந்துகள் - அமைச்சர் எச்சரிக்கை
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,” எனது எம்பி தொகுதி மேம்பாடு நிதி ரூ.1.13 கோடி மூலம் 2 திட்டங்களை மேற்கொள்ள உள்ளேன். அதில் சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 20 அரசு பள்ளி நூலகங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக தலா ரூ.2.75 லட்சம் வீதம் ரூ.55 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் இந்த நூலகங்களுக்கு இனி மகாத்மா காந்தி நூலகம் என பெயரிடப்படும். இதுதவிர சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.58 லட்சம் வழங்கியுள்ளேன்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Jobs, P.chidambaram, Sivagangai