சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக (ஓபிஎஸ் அணி) மாவட்டக் கழகச் செயலாளர் அசோகன் தலைமையில், கொள்கைப் பரப்பு செயலாளர்(ஓ.பி.எஸ் அணி) மருது அழகுராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இன்று காலை 11 மணிக்கு துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பதவி விலக வலியுறுத்தி பேசினர். மேலும் மாலை சிவகங்கைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஏராளமான கருப்பு பலூனை பறக்க விட்டனர்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளை புறம் தள்ளி கட்சியை எடப்பாடி பழனிசாமி அபகரிக்க முயல்வதாகவும், இதனால் கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை பல கோணங்களில் சித்தரித்தும், விமர்சித்தும் சிவகங்கை பகுதியில் போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒ.பி.எஸ் அணி கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், “அதிமுக 8 முறை தோல்வியை சந்தித்ததற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். ஆட்சியில் அமரவைத்த சசிகலாவிற்கே துரோகம் விளைவித்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை நம்பி சென்ற அண்ணாமலைக்கு தற்போது புரிந்திருக்கும்” என்றார். இந்த பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Local News, OPS - EPS, Sivagangai