முகப்பு /செய்தி /சிவகங்கை / ஈபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு... பலூன்களை பறக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!

ஈபிஎஸ் வருகைக்கு எதிர்ப்பு... பலூன்களை பறக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..!

கருப்பு பலூன்களை பறக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

கருப்பு பலூன்களை பறக்கவிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கருப்பு பலூனை பறக்க விட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கருப்பு பலூனை பறக்க விட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், துரோகத்தில் மூழ்கிய நச்சு பாம்பு ஈ.பி.எஸ் என்பதை பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தற்போது புரிந்து இருக்கும் என்று கூறினார்.

First published:

Tags: ADMK, OPS - EPS, Sivagangai