முகப்பு /செய்தி /சிவகங்கை / சம்பள பணம் ரூ.3 லட்சத்துடன் மதுபோதையில் மயங்கிய நபர்... பையை எடுத்து முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்

சம்பள பணம் ரூ.3 லட்சத்துடன் மதுபோதையில் மயங்கிய நபர்... பையை எடுத்து முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்

மூதாட்டி கவிதா

மூதாட்டி கவிதா

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த  மஞ்ச பையில் ரூ 3 லட்சம் பணம் இருந்துள்ளது. அதனை பார்த்த மூதாட்டி ஒருவர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் மஞ்சபை ஒன்று கீழே கிடந்துள்ளது. அதன் அருகில் வாலிபர் போதையில் கிடந்துள்ளார். இதை பார்த்த கொய்யாபழம் விற்பனை செய்யும்  மூதாட்டி கவிதா (63) கிழே கிடந்த மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள திருப்பத்தூர் நகர் காவல் நிலையம் சென்று காவல் சார்பு ஆய்வாளர் மலைச்சாமியிடம் ஒப்படைத்துள்ளார். 

காவல் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி பையை பிரித்துப் பார்த்த பொழுது உள்ளே சுமார் ரூ. 3 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. மூதாட்டியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பேருந்து நிலையம் சென்றார். அங்கு மது போதையில் இருந்தவரை எழுப்பி அவரைப் பற்றிய தகவலை சேகரிக்க முயன்ற பொழுது அவரால் தெளிவாக தகவலை சொல்ல முடியாத அளவிற்கு மது மயக்கத்தில் இருந்துள்ளார்.

தொடர் விசாரனையில்   அவர் பெயர் ராஜா என்றும் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் என்றும் பேராவூரணி அருகே திருப்பூரணிக்காடு பகுதியில்  மனைவியுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். சிங்கபூரில் முதலாளி தனக்கு தரவேண்டிய சம்பளத்தை அனுப்பி இருந்தார் எனவும் அவரது உறவினரிடம் இருந்து அதனை பெற்றுக் கொண்டு தேனி பேருந்து நிலையத்தில் இருந்து  பேராவூரணி வரும் வழியில் போதை அதிகமானதால் போருந்து நிலையத்திலேயே  பணத்துடன் நிலை மறந்து கிடந்ததாகவும் தெரிவித்தார்.

Also see... ஊக்க மருந்து சோதனையில் தமிழக வீராங்கனை தனலட்சுமி தோல்வி..

மேலும் பணத்தை சிலர் எடுக்க நினைத்து வட்டமிடும் போது மூதாட்டி எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது தெரிய வந்தது.  ராஜாவின் மனைவியை வரவழைத்து  எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை போலீசார் ஒப்படைத்தனர். சூழ்நிலை புரிந்து துரிதமாக செயல் பட்ட மூதாட்டியை காவல்துறையினர் பாராட்டினர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி

First published:

Tags: Karaikudi, Money, Police station, Sivagangai