Home /News /sivagangai /

14 எருமை மாடுகள், 134 ஆடுகளை காளிக்கு பலியிட்டு கொண்டாடப்படும் விநோத திருவிழா.. எங்கு தெரியுமா..?

14 எருமை மாடுகள், 134 ஆடுகளை காளிக்கு பலியிட்டு கொண்டாடப்படும் விநோத திருவிழா.. எங்கு தெரியுமா..?

எருமைகளை பலியிடும் வினோத திருவிழா

எருமைகளை பலியிடும் வினோத திருவிழா

கடந்த 25 தலைமுறைகளாக கொண்டாடிவரும் நிலையில் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Sivaganga
சிவகங்கை அருகே 14 எருமை மாடுகள், 134 ஆடுகளை காளி தெய்வத்திற்கு பலியிட்டு கொண்டாடப்படும் விநோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

சிவகங்கை அருகே நரிக்குறவர் இன மக்கள் 25 தலைமுறையாக காளி தெய்வத்திற்கு எருதுகளை பலியிட்டும், அம்மனுக்கு வெள்ளாடு பலியிட்டு கொண்டாடும் விநோத திருவிழா நடைபெற்ற நிலையில் பல்வேறு மாவட்டஙகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிவகங்கையை அடுத்துள்ளது பழமலை நகர். இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் ஆவணி மாத திருவிழா மிகவும் பிரபலமான திருவிழாவாகும். இதில் காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு எருதுகள், வெள்ளை ஆடுகள் ஆகியவற்றை பலிகொடுத்து அதன் ரத்தத்தை சுவாமி மீது தெளித்தும், குடித்தும் கொண்டாடுவது வழக்கம். ஆண்டிற்கு ஒரு முறை அல்லது 5 ஆண்டிற்கு ஒருமுறை என கொண்டாடும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களையும் சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் இந்த விழாவில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.



இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த சுவாமி உத்தரவிட்ட நிலையில் கடந்த  வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் இந்த திருவிழா தொடங்கியது.அங்குள்ள மைதானத்தில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு காளியம்மன், மதுரை மீனாட்சி, மாரியம்மன், மதுரை வீரன் ஆகியோரின் பாரம்பரிய சிலைகளை வைத்து திருவிழா வெகு விமரிசையாக துவங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து திருவிழாவின் 3ஆம் நாளான இன்று காளியின் குடில்களின் வாயில்களில் அமைக்கப்பட்ட பலிபீடத்தில் 14 எருதுகளை பலியிட்டு அதன் ரத்தத்தை சுவாமி சிலைகளுக்கு அபிசேகம் செய்ததுடன் அதனை குடித்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதேபோல் அம்மன் குடில்களுக்கு முன்னர் உள்ள பலி பீடத்தில் 134 வெள்ளை ஆடுகளையும் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கடந்த 25 தலைமுறைகளாக கொண்டாடிவரும் நிலையில் இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Festival, Sivagangai

அடுத்த செய்தி