Home /News /sivagangai /

இரட்டை மாட்டு வண்டியில் காட்சியளித்த உத்தம மீனாட்சி அம்மன்.. அதிகாலை வரை காத்திருந்து தரிசனம் செய்த மக்கள்

இரட்டை மாட்டு வண்டியில் காட்சியளித்த உத்தம மீனாட்சி அம்மன்.. அதிகாலை வரை காத்திருந்து தரிசனம் செய்த மக்கள்

உத்தம மீனாட்சி அம்மன் சப்பரத்தில் வீதி உலா

உத்தம மீனாட்சி அம்மன் சப்பரத்தில் வீதி உலா

Sivaganga | வேம்பத்தூர் கிராமத்தில் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ உத்தம மீனாட்சி அம்மனை மாடு பூட்டிய சப்புரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivagangai , India
    முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு மாடு  பூட்டி உத்தம மீனாட்சி அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை அதிகாலை வரை காத்திருந்து மக்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பறை இசை ஆட்டம், தப்பாட்டம் ஒயிலாட்டம் ஆகியற்றை கிராம மக்கள் ரசித்து பார்த்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி  ஆருகே  உள்ள வேம்பத்தூர் கிராமத்தில்  உள்ள  ஸ்ரீ உத்தம மீனாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் முளைப்பாரி உற்சவவிழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு  சப்பர விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    Also see... விளாத்திகுளம் அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு... கணவர் கைது...

    முன்னதாக அம்மன் இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பாக வந்து காட்சி அளித்தார். அதிகாலை வரை வீதி உலா வரும் அம்மனை தரிசிக்க கிராம மக்கள் காத்திருந்தனர். அம்மன் வீதி உலாவை முன்னிட்டு பறை இசை ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்  போன்ற கலை நிகழ்ச்சிகளை  கிராம மக்கள் கூடியிருந்து ரசித்து பார்த்தனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Sivagangai

    அடுத்த செய்தி