Home /News /sivagangai /

சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 டாஸ்மாக் பார்கள்.. அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு- ஆர்டிஐ தகவல்

சிவகங்கையில் அனுமதியின்றி செயல்படும் 40 டாஸ்மாக் பார்கள்.. அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு- ஆர்டிஐ தகவல்

மதுபாட்டில்

மதுபாட்டில்

Tasmac Bar : சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் மதுபானக் கூடங்களால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
    சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 131 அரசு மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 80-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளின் அருகிலேயே மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இதில் பாதிக்கும் மேற்பட்டவை அரசின் அனுமதி பெறாத மதுக்கூடங்கள் என்கிறார் நமது உரிமை பாதுகாப்பு இயக்கத் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்.

    பல மதுக்கூடங்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகார் எழுப்பப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளும் காவல் துறையினரும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் பிரகாஷ். இந்நிலையில், அனுமதி பெற்று இயங்கும் மதுக்கூடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரம் கேட்டுள்ளார்.

    இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 131 அரசு மதுபான கடைகளில் 34 கடைகள் மட்டுமே மதுக்கூடத்திற்கான அனுமதி பெற்று இயங்குவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகங்கையில் 2, காரைக்குடி மற்றும் காளையார்கோவிலில் தலா 7, தேவகோட்டையில் 10, இளையான்குடியில் 8 கடைகள் மட்டுமே அனுமதி பெற்று இயங்கிவருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் வட்டங்களில் ஒரு மதுக்கூடம் கூட அனுமதி பெறவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் சுமார் 40 -க்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுள்ளது.

    Must Read : சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

    அனுமதி பெறாமல் இயங்கும் மதுபானக்கூடங்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத மதுபானக் கூடங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    செய்தியாளர் : சிதம்பரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: RTI, Sivagangai, Tasmac

    அடுத்த செய்தி