சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசினார். அப்போது,” இன்றைக்கு கூட எதிர்கட்சியில் அவர்களுக்குள்ளே இருக்க கூடிய கோஷ்டி பூசல் மற்றும் சண்டையில் திமுக ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக பேசுகிறார்கள்.
பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பே சிவி சண்முகம் காட்டு மிராண்டியை போல மைக்கை பிடித்து மைக்கை கடித்து கொதருவதை போலவும் வீதிகளில் பேச கூடியவர்கள் போலவும் நடந்து கொண்டார்கள். இதிலிருந்தே அவர்கள் எப்படி பட்ட இயக்கம்.
அவர்களுக்கு இந்த நாட்டை பற்றி கவலை இல்லை மக்களை பற்றி கவலை இல்லை, அவர்களுடைய எண்ணம் எல்லாம் எப்படியாவது மீண்டும் வந்து தமிழகத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்.
Also see... அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டதாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
மேலும் ,” எப்படி அண்ணா இறந்த பிறகு திமுக காலி ஆகி விடும் என்று நினைத்தார்கள். ஆனால் அது கலைஞரால் பொய்ப்பிக்கப்பட்டது. அதே போல் கலைஞர் மறைவிற்கு பிறகு திமுகவில் பிரச்சனைகள் வரும் என்று நினைத்தார்கள். ஆனால் எதிர்பார்த்தவர்கள் தற்போது எமார்ந்து விட்டார்கள்.
Also see... 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்- போக்குவரத்துதுறை
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் கலைஞரை போல் அண்ணாவை போல் தமிழ்நாட்டு மக்களுக்கு நல் வாழ்க்கையை தந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கையில் அதிமுக வினருக்கு பொறாமை.
அந்த பொறாமையின் உச்சத்திலே தான் பொதுக்குழுவை கூட்டி அவர்கள் அடித்து கொள்கிறார்கள், மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரு இயக்கம், தமிழ் இனத்திற்காக மொழிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்க கூடிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக திமுக இருக்கிறது” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, CV Shanmugam, DMK