ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

உதயநிதியை வரவேற்க நடப்பட்ட கொடிக்கம்பம்.. விழா முடிந்ததும் அகற்றிய போது விபத்து... மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

உதயநிதியை வரவேற்க நடப்பட்ட கொடிக்கம்பம்.. விழா முடிந்ததும் அகற்றிய போது விபத்து... மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி

காரைக்குடியில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக திமுக சார்பில் சாலையின் இருபுறமும் திமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக நடப்பட்ட திமுக கொடிக்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

வேலைவாய்ப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகை தந்தார்.

இதையொட்டி, காரைக்குடியில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக திமுக சார்பில் சாலையின் இருபுறமும் திமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டன.

நள்ளிரவில் திடீர் உடல்நலக்குறைவு ; அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

நிகழ்ச்சி முடிந்ததும் நள்ளிரவு சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிகம்பங்களை ஊழியர்கள் அகற்றினர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வீரமலை என்பவர் உயிரிழந்தார்.

First published:

Tags: Dead, Electricity, Sivagangai, Udhayanidhi Stalin