முகப்பு /செய்தி /சிவகங்கை / அடுக்குமாடி குடியிருப்பு கண்ணாடி விழுந்து சாலையில் சென்றவர் பலி.. காரைக்குடியில் சோகம்

அடுக்குமாடி குடியிருப்பு கண்ணாடி விழுந்து சாலையில் சென்றவர் பலி.. காரைக்குடியில் சோகம்

பெயர்ந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு கண்ணாடி

பெயர்ந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பு கண்ணாடி

Sivagangai District News : மாண்டஸ் புயல் காற்றில் அடுக்குமாடி கண்ணாடி உடைந்து  விழுந்ததில் சாலையில் சென்ற கேஸ் சிலிண்டர் எடுத்து சென்றவர் பலியானார்.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

மாண்டஸ் புயல் காற்றில் அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி விழுந்து கேஸ் சிலிண்டர் எடுத்து சென்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

காரைக்குடி பாரத் கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் பழனியப்பன்(45) சிறு கூடல்பட்டி கிராமத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.இந்நிலையில், இவர் இன்று  காரைக்குடி பர்மா காலனி தந்தை பெரியார் நகர் 9வது வீதியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் பணி செய்துவிட்டு டூவீலரில் மெயின் ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மாண்டஸ் புயல் காற்று அடித்தன் காரணமாக தந்தை பெரியார் நகர் 9ம் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு  பக்கவாட்டு கண்ணாடி பெயர்ந்து டூவீலரில் சென்று கொண்டிருந்த பழனியின் கழுத்தை நோக்கி பாய்ந்தது.

இதையும் படிங்க : Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

இதில் கழுத்தில் படுகாயம் அடைந்து பழனி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி

First published:

Tags: Cyclone Mandous, Local News, Sivagangai