முகப்பு /செய்தி /சிவகங்கை / மடப்புரம் காளியம்மன் சிலையிலிருந்த விலையுயர்ந்த தங்க மூக்குத்திகள் திருட்டு - அதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்..

மடப்புரம் காளியம்மன் சிலையிலிருந்த விலையுயர்ந்த தங்க மூக்குத்திகள் திருட்டு - அதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்..

பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் போலிசார் விசாரணை

பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் போலிசார் விசாரணை

Madapuram Kaliamman Temple | தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மன் சிலையில் இருந்த தங்க மூக்குத்திகள் திருட்டு போன சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள  மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற காளிகோவில் உள்ளது. இங்கு, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், ஆடி வெள்ளி போன்ற விஷேச நாட்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கீழ் மடப்புரம் காளி ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார்.

இந்த காளி அம்மன் சிலையின் முகத்தில் இருந்த இரண்டு கல் பதிக்கப்பட்ட 42 கிராமில் ஆன தங்க மூக்குத்திகள் மார்ச் 1ம் தேதியன்று இரவு திருட்டு போயுள்ளன. இரவு நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு இரவு நேர காவலர்களும் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் போதே சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் தங்க மூக்குத்திகளை திருடி சென்றுள்ளனர்.

இந்த கோவிலை சுற்றி 21 சிசிடிவி கேமரா இருந்த நிலையில் அதில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சிசிடிவி காட்சியின்படி உள்ளே வரும் இளைஞர், காளி அம்மனிடம் முக்கூத்தி  திருடிவிட்டு மீண்டும் அரிவாள் எடுத்து வந்து உண்டியலை சுற்றி வந்து, மீண்டும் வந்த வழியாக கொள்ளையில் ஈடுபட்டு சென்று உள்ளான்.

மேலும் படிக்க :  திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமாகா கவுன்சிலர்..!

மூக்குத்தி காணவில்லை என நேற்று(02/03/2023) காலை பூஜையின் போது கண்டறியப்பட்டு திருப்புவனம் போலீசில் செயல் அலுவலர் புகார் கொடுத்துள்ளார். அதில் திருடு போன கல் பதிக்கபட்ட 42 கிராம் மூக்குத்திகளின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை. கல் வைக்கப்பட்ட தங்க மூக்குத்திகள் என்பதால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்தவை என கருதப்படுகிறது. நேற்றிலிருந்து அம்மனின் மூக்கில் எதுவும் இன்றி சேதமடைந்த நிலையிலேயே பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருட்டுச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரசித்தி பெற்ற மடப்புரம் காளி அம்மனிடம் இருந்து தங்க மூக்குத்தியை திருடி சென்றது சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Sivagangai