காரைக்குடி அருகே குறைந்த செலவில் பாக்டீரியாவில் இயங்கும் இலகுரக விமானத்தை கண்டுபிடித்து இளைஞர் சாதனை செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கார் வாங்கும் விலையில் குறைந்த செலவில் உப்பு தண்ணீர் , சாதா பெட்ரோல் பாக்டீரியாவில் இயங்கும் இலகுரக விமானத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்து உள்ளார். விமான பயிற்சி பெற பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், இந்திய ஏழை மாணவர்களுக்கு விமானி ஆவது பெரும் கனவாகவே உள்ளது.
இதற்கான கல்லூரிகளில் கிராமத்து மாணவர்களுக்கு இடம் கிடைப்பதும் சிரமம். இந்நிலையில் காரைக்குடி அருகே கண்டனூரைச் சேர்ந்தவர் எபினேசர் (29). இவர் நனண்பர்கள் உதவியுடன் குறைந்த செலவில் இலகுரக விமானத்தை கண்டுபிடித்துள்ளார். ஏரோநாட்டிக்கல் பொறியாளரான இவர் அமெரிக்கா சென்று விமான நிலையத்தில் பணியாற்றி விமானியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு குறைந்த செலவில் விமான பயிற்சி அளிக்க விரும்பிய அவர் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு நண்பர் சிவபிரகாசம், சகோதரர் செல்வகுமரன் உள்ளிட்டோர் உதவியோடு குறைந்த செலவில் இலகுரகு விமானத்தை கண்டுபிடித்தார்.
இந்த விமானம் தொழிற்சாலை கழிவுகளில் உருவாகும் பாக்டீயா மூலமும், உவர்ப்பு நீரை பயன்படுத்தி அதில் கிடைக்கும் வாயு மூலமும் , சாதாரண பெட்ரோல் மூலமும் இயங்கும் வகையில் நவீன முறையில் அப்ளிக்கேசன் உருவாக்கி அதில் இயங்கும் வகையில் இஞ்சின் தயாரித்து இந்த விமானத்தை வடிவ மைத்துள்ளார்.
தற்போது இந்த இலகு ரக விமானத்துக்கு அனுமதி பெற, இந்திய விமான போக்குவரத்துக் கழகத்திடமும் பொதுமக்களிடம் மாணவர்களிடத்தில் கண்டுபிடித்த விமானத்தை வானில் பறந்து காட்டவும் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து காத்திருக்கிறார்.
இந்த விமானம் 11,000 அடி உயரத்தில் பறக்கும். தொடர்ந்து 5 மணி நேரம் இதில் பயணிக்கலாம். எரிபொருள் இல்லாவிட்டாலும் ஆபத்து ஏற்படாது.
Also see... சூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர்
தரையிறங்கும் வரை இயங்கும். தற்போது இந்தியவில் உள்ள இலகுரக விமானங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதனால் அதன் விலை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இருக்கும். தற்போது இவர் கண்டுபிடித்த விமானத்துக்கு ரூ.10 லட்சம் கூட செலவாகாது. வெறும் கார் வாங்கும் செலவு தான். உள்நாட்டு பொருட்களை வைத்தே தயாரிக்கப்பட்டது.
இதற்கு எரிபொருளாக சாதாரணமாக விமானங்களில் பயன்படும் ஏடிஎப். இதுதவிர ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் வெடிக்க கூடிய வாயு. அது வெடிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம் எனக் கூறும் இவர், முதல்முறையாக தொழிற்சாலை கழிவுகளில் உள்ள பாக்டீரியாவில் இருந்து உருவாகும் ஹைட்ரஜனை பயன்படுத்துகிறோம் என்றார்.
மேலும், ”பாக்டீரியாக்கள் அதிகளவில் ஹைட்ரஜனை உருவாக்கும். அதேபோல் உவர்ப்பு நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்தும் முறையையுயம் கண்டுபிடித்துள்ளோம். மூன்று முறைகளிலும் எரிபொருட்களை பயன்படுத்த எரிபொருள் டேங்கை மூன்று பகுதிகளாக பிரித்துள்ளோம். இந்த விமானத்துக்கு அனுமதி கிடைத்ததும் குறைந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு விமான பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன்” என்று எபினேசர் கூறுகிறார்.
செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.