ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

“அப்பாவ விட்டு வரமாட்டேன்..!” தந்தையை பிரிய மறுத்த குழந்தைகளை தரதரவென இழுத்து சென்ற தாய்!

“அப்பாவ விட்டு வரமாட்டேன்..!” தந்தையை பிரிய மறுத்த குழந்தைகளை தரதரவென இழுத்து சென்ற தாய்!

குழந்தைகளை இழுத்து செல்லும் தாய்

குழந்தைகளை இழுத்து செல்லும் தாய்

Karaikudi Mothers incident | கணவனை விட்டு பிரிந்து சென்ற மனைவி குழந்தைகள் தன்னுடன் அனுப்பி வைக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi) | Sivaganga

காரைக்குடி அருகே தந்தையை விட்டு வர மறுத்து கதறிஅழுத குழந்தைகளை தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற தாயின் செயல் பலரையும் கண்கலங்க செய்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பேயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலையரசன்(38) - கோகிலா (32) தம்பதியினர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோகிலா குடும்பத்தை விட்டு தாய் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.2 குழந்தைகளையும் கலையரசனே கவனித்து வருகிறார். இவர்களின் சிவில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோகிலா மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த போலீசார், இரு குழந்தைகளையும் தாயுடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர்.  ஆனால் இதை ஏற்க மறுத்த குழந்தைகள், தந்தையை விட்டு வரமாட்டோம் என்றும், தந்தையிடம் இருந்து பிரிக்காதீர்கள் எனவும் கதறி அழுதுள்ளனர். ஆனால், எதையும் பொருட்படுத்தாத கோகிலா இரு குழந்தைகளையும் கதற கதற தரதரவென சாலையில் இழுத்து சென்றார்.

இதனைக்கண்ட பொதுமக்கள் குழந்தைகளின் கதறல் சத்தத்தை கேட்க முடியாமல் மனமுருகி நின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பொறுத்து கொள்ள முடியாத கலையரசன், மனைவியிடம் வாக்குவாதம் செய்து இரு குழந்தைகளையும் பைக்கில் அழைத்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கோகிலா குழந்தையை அவரே அழைத்து சென்று விட்டதாக மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்து குழந்தைகளை அனுப்பி வைக்க கூறியுள்ளனர். அப்போது கலையரசன் தான் அடுத்த வாரம் வருகிறேன் என கூறி குழந்தைகளை சமாதானம் செய்து விருப்பமின்றி தாயுடன் அனுப்பி வைத்தார்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.

First published:

Tags: Karaikudi, Local News, Sivagangai, Tamil News