ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

ஒரே கோயிலில் 2வது முறையாக உண்டியல் திருட்டு.. அலேக்காக தூக்கி சென்ற மர்மநபர்கள்! காரைக்குடியில் அதிர்ச்சி!

ஒரே கோயிலில் 2வது முறையாக உண்டியல் திருட்டு.. அலேக்காக தூக்கி சென்ற மர்மநபர்கள்! காரைக்குடியில் அதிர்ச்சி!

உண்டியல் கொள்ளை

உண்டியல் கொள்ளை

Sivagangai theft | தொடர்ந்து 2வது முறையாக கோயில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi) | Sivaganga

தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை நாச்சியம்மன் கோவிலில் மூலஸ்தான கதவை உடைத்து இரண்டாவது முறையாக உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இக்கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடு போயிருந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு திருட்டு அரங்கேறியுள்ளது. வழக்கம் போல் நேற்று கோயிலின் பூசாரி பூஜை செய்வதற்காக மாலை கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோயிலின் மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலை இரண்டாவது முறையாக திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கண்ணங்கோட்டையில் கடந்த ஜன-11 ம் தேதி வீடு புகுந்த கொள்ளையராகள் வீட்டில் உறங்கி  மூவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி நகையை கொள்ளையடித்து சென்றனர். இதில் தாய் மகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 15 நாட்களில் மீண்டும் அதே கிராமத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.

First published:

Tags: Karaikudi, Local News, Sivagangai, Theft