சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் பெண் செவிலியரிடம் திமுக நிர்வாகி ரகளையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் உலகப்பன் இவர் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக கானாடுகாத்தான் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் உலகப்பன்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் மருத்துவமனையில் தங்கி காலை, மாலை என இருவேளையும் ஆண்டிபயாட்டிக் ஊசி மூலம் மருந்து செலுத்த பரிந்துரை செய்துள்ளனர். மருத்துவமனையில் தங்காமல் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்து கொண்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக பதிவு செய்து கொண்டு காலை, மாலை இருவேளையும் வீட்டில் இருந்து வந்து ஆன்ட்டிபயாட்டிக் ஊசி போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில். காலை 8 மணிக்கு செலுத்த வேண்டிய ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள, காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு தாமதமாக வந்துள்ளார் உலகப்பன். அத்துடன், தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைப் பார்த்த பெண் செவிலியர் ஆதிலெட்சுமி காலை 8 மணிக்கு போட வேண்டிய ஊசிக்கு 11 மணிக்கு வந்துள்ளீர்கள், மேலும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி ஊசி போடுவது என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி உலகப்பன் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரை தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து பேசியுள்ளார். அரசியல்வாதி என்பதால் அப்போது, செவிலியரும் பொறுமையாக அமைதி காத்துள்ளார்.
Must Read : பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது
அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகி நடந்து கொண்ட விதம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Karaikudi, Sivagangai, Viral Video