முகப்பு /செய்தி /சிவகங்கை / காரைக்குடி நகைக்கடை இடைத்தரகரிடம் 2.5 கிலோ தங்கம் கொள்ளை... போலீஸ் வேடம் அணிந்த நபர்கள் கைவரிசை..!

காரைக்குடி நகைக்கடை இடைத்தரகரிடம் 2.5 கிலோ தங்கம் கொள்ளை... போலீஸ் வேடம் அணிந்த நபர்கள் கைவரிசை..!

காரைக்குடி காவல் நிலையம்

காரைக்குடி காவல் நிலையம்

Karaikudi Gold Theft | இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India

காரைக்குடியில் போலீஸ் வேடமணிந்து வந்து நகைக்கடை இடைத்தரகரை கடத்தி சென்று இரண்டரை கோடி பணம், ஒன்றரை கிலோ தங்கத்தை பறித்து சென்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளின் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். இவர், நகை வியாபாரிகளிடம் பணத்தை பெற்று சென்று சென்னையில் இருந்து நகை வாங்கி வந்து கொடுத்து கமிஷன் பெற்று வந்துள்ளார்.

அந்த வகையில் நகையுடன் ஆம்னி பேருந்தில் வந்த ரவிச்சந்திரன் இன்று காலை 4.30 மணி அளவில் கழனிவாசல் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது, காவல்துறையினர் போல் வேடம் அணிந்து வந்த 4 பேர், அவரை காரில் கடத்தி சென்று இரண்டரை கோடி பணம் மற்றும் ஒன்றரை கிலோ நகைகளை பறித்துக்கொண்டு புதுக்கோட்டை சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

செய்தியாளர்: முத்துராமலிங்கம் துரைராஜ்

First published:

Tags: Karaikudi, Local News, Sivagangai