ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

இன்ஸ்டாகிராம் நண்பனை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய 13வயது சிறுமிகள் - பத்திரமாக மீட்ட போலீஸ்

இன்ஸ்டாகிராம் நண்பனை பார்க்க வீட்டைவிட்டு வெளியேறிய 13வயது சிறுமிகள் - பத்திரமாக மீட்ட போலீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Sivagangai News: காரைக்குடியில் வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமிகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கையில் இன்ஸ்டாகிராம் நண்பனை தேடி 13 வயது சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிகள் இருவர் நேற்று மாலை திடீரென மாயமாகினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஏஎஸ்பி-யிடம் புகார் தெரிவித்தனர்.  அதனை தொடர்ந்து  காரைக்குடி ASP ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து சிறுமிகளை தேடும்  பணிகள் முடக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் சிறுமிகள் கடைசியாக தங்களது பெற்றோருக்கு பேசிய செல்போன் எண்களை போலீஸார் ட்ராக் செய்தனர். இதனையடுத்து அந்த செல்போன் எண்ணை தொடர்புக்கொண்டு பேசினர். அப்போது சிறுமிகள் இருவரும்  தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்வது தெரிய வந்தது.

இதையும் படிங்க:  2 குழந்தைகளின் தாய் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. நள்ளிரவில் கணவன் வெறிச்செயல் - குமரியில் அரங்கேறிய பயங்கரம்

இதனைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போலீஸார் சிறுமிகள் இருவரையும் அருகில் இருந்த எட்டயபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.  அதனை தொடர்ந்து இரண்டு சிறுமிகளையும் தூத்துக்குடி  காவல்துறையினர் முலம் மீட்டு காரைக்குடி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் நண்பரை தேடி தூத்துக்குடிக்கு சென்றதாக  முதல் கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.விரைந்து செயல்பட்டு  புகார் பெற்ற நான்கு மணி நேரத்தில் காவல்துறையினர் சிறுமிகளை மீட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

செய்தியாளர் :  முத்துராமலிங்கம் (காரைக்குடி)

First published:

Tags: Instagram, Local News, Sivagangai, Tamil News